நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கும் படம் ‘செய்’. இந்தப் படத்தை கோபாலன் மனோஜ் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘சாரதி’ என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்திருப்பவர். ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ள நிக்ஸ் லோபஸ் , ‘செய்’ இந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளரான ராஜேஷ் சுக்லா இதன்மூலம் ஒளிப்பதிவாளர் ஆகிறார். பியாண்ட் ஐ எண்டர் டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுபின், மற்றும் ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மன்னு உமேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இது சினிமா பின்னணியிலான கதையில் உருவாகும் ஒரு படம். படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா பிரசாத் லேப் தியேட்டரிலுள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ‘செய்’ படத்தின் தொடக்க நாள் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. சந்திப்பில் தயாரிப்பாளர் சுபின் பேசும்போது “இன்று தொடங்கியுள்ள இப்படம் வளர்ந்து வெற்றி பெற, ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரின் ஆதரவும் தேவை” என்றார் ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் பேசும்போது “அநேகமா இன்னிக்கு கேரளாவுல யாருமே …
Read More