நகுல் ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்கும் ‘செய்’

sey 5

நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கும் படம் ‘செய்’.

இந்தப் படத்தை கோபாலன் மனோஜ் என்பவர் இயக்குகிறார். 

இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘சாரதி’ என்கிற   வெற்றிப் படத்தைக்  கொடுத்திருப்பவர். 

ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ள நிக்ஸ் லோபஸ் ,

‘செய்’  இந்தப் படத்தின் மூலம்  இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். 

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளரான ராஜேஷ் சுக்லா இதன்மூலம் ஒளிப்பதிவாளர் ஆகிறார். 

sey 2

பியாண்ட் ஐ எண்டர் டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுபின், மற்றும் ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்ஷன்ஸ்  நிறுவனத்தைச் சேர்ந்த மன்னு  உமேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இது சினிமா பின்னணியிலான கதையில் உருவாகும் ஒரு படம்.

படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா  பிரசாத் லேப் தியேட்டரிலுள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. 

தனைத் தொடர்ந்து ‘செய்’ படத்தின் தொடக்க நாள் செய்தியாளர் சந்திப்பு  நடந்தது.

சந்திப்பில் தயாரிப்பாளர் சுபின் பேசும்போது 

sey 7

“இன்று தொடங்கியுள்ள இப்படம் வளர்ந்து வெற்றி பெற,

ஊடகங்கள் உள்ளிட்ட  அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்

ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் பேசும்போது 

“அநேகமா இன்னிக்கு  கேரளாவுல யாருமே இருக்க மாட்டாங்க போல .

எல்லாரும் இந்த படத்துக்காக  இங்க  வந்துட்டாங்க. 

 இதுவரை முன்னணி நாயகர்கள் பலருடனும் பணியாற்றியுள்ள நான், 

sey 4

முதன் முதலில் நகுலுடன் ‘செய்’ படத்தில் இணைகிறேன். 

இந்த ‘செய்’ படத்தில் நான் ‘செய்’ய வேண்டியவேலைகள் நிறைய இருக்கின்றன. 

அதன் மூலம் எனக்கு  நல்ல பெயர் வரும்.” என்றார் நம்பிக்கையுடன். 

‘காஞ்சனா’ புகழ் கலை இயக்குநர் ஜனா பேசும்போது “இதில் எதிர்பார்ப்புடன் பணி புரிகிறேன். 

அந்த அளவுக்கு கலை இயக்குநராக என் பங்கு இப்படத்தில் இருக்கும்.” என்றார். 

கதை, திரைக்கதை எழுதியுள்ள ராஜேஷ் கே. ராமன் பேசும்போது, 

 

sey 3

“நமக்குள் நல்லது, கெட்டது, சாத்தான் எல்லாமும் இருக்கும். 

அதே போல   இப் படத்திலும் நல்லது, கெட்டது எல்லாம் கலந்த வாழ்க்கை இருக்கும்.” என்றார்.

கதாநாயகி ஆஞ்சல்  ”தமிழில் இப்போது என்னால் பேச முடியவில்லை.

 இப்படம் நடிக்கும் போது  தமிழ் பேசக் கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன்.

  படம் முடியும் போது நிச்சயம் தமிழில் பேசுவேன்  என்று நம்புகிறேன்” என்றார்.

நாயகன் நகுல் பேசும்போது “நான் எப்போதும் தேர்ந்தெடுத்தே படங்களில் நடிப்பேன்.

sey 6

யோசித்துதான் கதைகளைத் தேர்வு செய்வேன். இப்படத்தில் என் பாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. 

அது வித்தியாசமாக இருக்கும்; படமும் மாறுபட்ட படமாக இருக்கும். 

இதில் நான் பங்குபெறுவதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

படத்தை இயக்கும் கோபாலன் மனோஜ் பேசும்போது ”

sey 8

இது எனக்கு முதல் தமிழ்ப்படம். 

ஒரு பெரிய நடிகராக நினைக்கும் ஒரு பையனும், 

ஒரு பெரிய இயக்குநராக நினைக்கும் ஒரு பெண்ணும் சந்திக்கிறார்கள். 

sey 88

அந்த சந்திப்பு அவர்களது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை உண்டாக்குகிறது.  

இதுதான் செய் படத்தின் ஒன்லைன் ” என்றார். 

ரசிகனை வச்சு செய்ற மாதிரி இல்லாம,  ரசிக்கிற மாதிரி செய்ங்க….!  செய்ங்க….!

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →