சித்தார்த் , திவ்யான்ஷா நடிப்பில் ‘டக்கர் ‘

பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரிப்பில் சித்தார்த் யோகி பாபு, திவ்யான்ஷா , முனீஷ்காந்த்  நடிப்பில் கார்த்திக் கிரிஷ் இயக்கி இருக்கும் படம் டக்கர். 

 
எப்படியாவது பணக்காரனாக ஆக ஆசைப்படும் ஒரு இளைஞனுக்கும், ஒரு கார் நிறுவன உரிமையாளர் மகளும் விட்டேத்தியான நவநாகரீக அலட்சியப் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் பழக்கமும்  விளைவுமே படம் என்கிறார் இயக்குனர் . 
 
“இது ஜாலியான அழகான கலர்ஃபுல்லான படம். யோகி பாபு இரட்டை வேடத்தில்  நடித்துள்ளார் . லவ் , காமெடி ஆக்ஷன் எல்லாம் இருக்கிறது . படம் முழுக்க சின்ன சின்ன சிந்தனைக்கு உரிய விசயங்களை உரையாடலாக நிகழ்த்தி உள்ளேன் .
 
அளவுக்கு மேல பணக்காரனா இருக்கிறது சுமை என்று ஒருவர் சொல்ல, இதெல்லாம் ஏழைகளுக்கு சொல்லும் சமாதானம். ஒரு ஏழையா இருந்து இப்படி சொல்லச் சொல்லு ” என்று ஒரு வசனம் வரும் . இது ஒரு உதாரணம் ” என்றார் இயக்குனர் . 
 
முன்னோட்டம் பாடல்கள் காட்டினார்கள் . அழகாக வண்ணமயமாக இருந்தன . இசை நிவாஸ் பிரசன்னா . பாடல்கள் நன்றாக இருந்தன . ஒரு பாடல் ஒய்யால ஒய்யால என்று ஆரம்பிக்கிறது . .
 
“இது கெட்ட வார்த்தை இல்லையா இப்படி ஆரம்பிக்கலாமா/” என்ற கேள்விக்கு அதெல்லாம் இப்போ யார் சார் பாக்கறாங்க என்றார் இயக்குனர் . 
 
டக்கர் ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *