‘டைனோசர்ஸ்’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

Galaxy Pictures ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், M R மாதவன் இயக்கத்தில்,  உதய் கார்த்திக், ‘அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, D மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு, TN அருண்பாலாஜி ஆகியோர்  நடித்துள்ள திரைப்படம் டைனோசர்ஸ். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.  டிரெய்லர் வெளியீட்டு விழா திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் பேசியபோது, “எங்களுக்காக எங்களை வாழ்த்த வந்த திரைப் பிரபலங்களுக்கு நன்றி. எப்போதுமே ஒரு புது டீம் என்னமாதிரி படம் தருவார்கள் என்று சந்தேகம் இருக்கும். ஆனால் எங்கள் படத்தின் மீது எங்களுக்கு மிகப் பெரும் நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் ஹெச் வினோத் மூலம்தான் இந்தப் படத்தின் இயக்குநர் அறிமுகமானார். இயக்குநர் மிகத் திறமையானவர்.

இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பல தடைகளைத் தாண்டியே இந்தப் படத்தைச் செய்துள்ளோம். படம் பார்க்கும்போது படத்தின் தரம் உங்களுக்குத் தெரியும். இன்று எங்களை வாழ்த்த இத்தனை ஜாம்பவான்கள் வந்திருப்பதே எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்”என்றார். 

நடிகர் ஸ்ரீனி பேசிய போது, “2015 லிருந்தே இயக்குநர் மாதவனைத் தெரியும், முதல் தடவ அவரிடம் கதை கேட்டுட்டு ஏன் தலைவா டைனோசர்ஸ் தலைப்பு என்றேன், பொறக்கும்போது  ஈயா, எறும்பா கூட பொறக்கலாம்… ஆனா சாகும்போது டைனோசரா சாகனும். ஏன்னா : அப்ப தான் நம்ம செத்தா, தூக்குறதுக்கு  ஒரு ஆயிரம் பேராவது வருவான் அப்படினு சொன்னாரு.

இன்னைக்கு சத்யம் தியேட்டர்ல எங்க டைனோசர்ஸ் படத்தோட டிரெய்லர் அதே 1000 பேருக்கு முன்னாடி இவளோ பெரிய  வெளியிட்டு விழா வா நடக்கும்போது அத மிக சந்தோசமா உணருறேன்.  கொரோனா காலகட்டத்தைத் தாண்டி பல இன்னல்களுக்கு இடையில்  இந்தப்படத்தைச் செய்துள்ளோம். இந்த படம் எங்க எல்லாரோட வாழ்கைளையும் ரொம்ப முக்கியமான படம், இதுக்காக நாங்க 4வருஷமா காத்துட்டு இருக்கோம். கண்டிப்பாக உங்களுக்குப் படம் பிடிக்கும்.  நன்றி.

 

நடிகர் TN அருண் பாலாஜி பேசிய போது, “மாதவனுக்கும் எனக்கும் 12 வருட நட்பு அப்போதே என்னிடம் இந்தக்கதையை சொன்னார். 2011 ல் சொன்ன கதை ஆனாலும் இப்போது வரை என்னை ஞாபகம் வைத்து எனக்கென அந்த கதாப்பாத்திரத்தை தந்தார். படம் நன்றாக வந்துள்ளது “என்றார். 

நடிகர் புருஷோத் பேசிய போது, “டைனோசர்ஸ் குடும்பத்திற்கு என் வாழ்த்துக்கள். நான் ஒரு சின்ன கதாப்பாத்திரம்தான்  செய்துள்ளேன். மாதவன் ஸ்கூலில் என் ஜீனியர் அப்போதிலிருந்தே அவரைத் தெரியும், இப்படம் மிகப்பெரும் உழைப்பில் உருவாகியுள்ளது. படம் வெற்றி பெறப் பிரார்த்திக்கிறேன் “என்றார். 

வழக்கறிஞர் சஞ்சய் ராமசாமி பேசிய போது, ”  ..இன்று பலரின் கனவு நனவாக மாறியுள்ளது , இந்தப் படத்தின் நாயகன் உதய் கார்த்திக் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் , படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

வேளச்சேரி சட்ட மன்ற உறுப்பினர் J. M. H. அசன் மவுலானா பேசிய போது, “சினிமாவுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. இப் படத்தில் நடித்திருக்கும்  நண்பர் அருண் பாலாஜி என் பள்ளித்தோழர். இந்தப் படம் பார்க்கும் படி என்னை அழைத்தார். தலைவா படம் சரியில்லை என்றால் நான் போய் விடுவேன் என்றேன், பரவாயில்லை வந்து பாருங்கள் என்றார்.

ஆனால் படம் முழுமையாக என்னைக் கட்டிப் போட்டுவிட்டது. முழுப்படமும் பார்த்து ரசித்தேன். தயாரிப்பாளர் ஶ்ரீனிக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் முதலீடு பன்மடங்காக திரும்ப வரும். இயக்குநர் மற்றும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். “என்றார்.
 
தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேசிய போது, “முதலில் தயாரிப்பாளர் ஸ்ரீனி அவர்களுக்கு வாழ்த்துகள் , முன்னணி நடிகர்கள் வைத்து எடுக்காமல் கதையை நம்பி படத்தை உருவாக்க நினைத்துள்ளார், இயக்குநர் மாதவன் நமக்கு மாஸாக ஒரு படத்தைத் தந்துள்ளார், கேமராமேன் ஆனந்த் சிறப்பாகச் செய்துள்ளார், கதாநாயகர் உதய் கார்த்திக் எனக்கு மிகவும் நெருக்கமானவர் அவர் ஶ்ரீ தேவியின் குடும்பத்திலிருந்து வந்தவர் அவர் பெரும் கதாநாயகனாக வலம் வருவார் அவருக்கு வாழ்த்துக்கள்”என்றார்.
 
நடிகை மகேஸ்வரி பேசிய போது, “இந்த டைனோசர்ஸ் படத்தில் பணிபுரிந்த அனைவரும் பெரும் கஷ்டத்தை அனுபவித்துள்ளனர், உதய் கார்த்திக் சிறப்பாக நடித்துள்ளார், தயாரிப்பாளர் ஸ்ரீனி மற்றும் இயக்குநர் மாதவனுக்கு வாழ்த்துக்கள். புது முக நடிகர்களிடமிருந்து நல்ல நடிப்பை வாங்கியுள்ளார், “என்றார். 
 
‘அட்டு’ புகழ் நடிகர் ரிஷி ரித்விக்  பேசிய போது, “அட்டு படத்திற்குப் பிறகு மீண்டும் நார்த் மெட்ராஸ் கதை. ஒரு நல்ல அனுபவம் இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி , உதய் கார்த்திக் அவர்களுக்கு இதற்குப் பின் சிறந்த எதிர்காலம் இருக்கும் , எங்கள் அனைவருக்கும் உங்கள் ஆதரவு தர வேண்டும்”என்றார்.
 
நடிகை சாய் ப்ரியா தேவா பேசிய போது, “மாதவன் சார் என்னிடம் கதை சொன்னதை விட மிக அற்புதமாகப் படத்தை எடுத்துள்ளார். ஒவ்வொருவரும் மிகப்பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். எங்கள் குழுவினரின் உழைப்பு மிகப்பெரிய வெற்றியைத் தரும். அன்பை அனைவரிடமும் பகிருங்கள் “என்றார்.
 
திருமலை இயக்குநர் ரமணா பேசிய போது, “பதினொரு வருடத்திற்குப் பிறகு என்னுடைய படம் வெளியானால் எனக்கு இருக்கும் மகிழ்ச்சி போன்று எனக்கு இன்று உள்ளது அதற்கு காரணம் மாதவன், இந்தப் படத்தில் நான் பணி செய்யக் காரணம் சென்னை நகரை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்,.
 
இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும் அனைவரும் புதிது என்று சொன்னார்கள் அதற்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் கூறவில்லை படத்தின் கதை புதிது அதற்காக இப்படம் வெற்றி பெற வேண்டும் , பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் “என்றார். 

நாயகன் உதய் கார்த்திக் பேசிய போது, “முதலில் என் மாமா போனி கபூர் அவர்களுக்கு நன்றி, கோவிட் நேரங்களிலும் மூன்று படத்தை வெளியிட்டு பலரது வாழ்வில் வெளிச்சத்தை அளித்துள்ளார், அவருக்குப் பல பணிகள் உள்ளது இதற்கிடையில் எனக்காக இங்கு வந்ததற்கு நன்றி, இயக்குநர் மிஷ்கின் சார் நான் உங்களுடைய ரசிகன் அஞ்சாதே படம் முதல் இன்று வரை உங்களைப் பார்த்து வியந்து வருகிறேன் ,

அருண் விஜய் அண்ணா ஒரு ஹாலிவுட் நடிகர் தன்னை செதுக்குவது போல் செதுக்கியவர், இயக்குநர் ரமணா சாருக்கு நன்றி, இங்கு வந்துள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு இந்த தருணம் பெருமையாக உள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சாருக்கு மிகப்பெரும் நன்றி. “என்றார் 
 

நடிகர் விஜயகுமார் பேசிய போது, ” தயாரிப்பாளர் நம்பிக்கையுடன் பேசினார், அதை வைத்தே சொல்லுகிறேன் அவர் மட்டுமல்லாது படக் குழுவினர் அனைவரும் அதே நம்பிக்கையோடு உள்ளனர், கதையின் நாயகன் உதய் கார்த்திக் என் குடும்பத்தின் பிள்ளை அவருக்காகத் தான் இங்கு வந்தேன், படக்குழுவினர் அனைவரும் புதிது என்றனர் இப்போது படத்தின் கதையும் படமும் தான் முக்கியம் எனவே மக்கள் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்வார்கள். “என்றார். சண்டைப்பயிற்சி  இயக்குநர் ஸ்டன்னர் சாம் , “எனக்கும் இயக்குநருக்கும் நீண்ட நாட்கள் பழக்கம், அனைவருக்கும் நன்றி எனக்கு ஸ்டன்னர் என்ற அடைமொழி கொடுத்தது இயக்குநர் மாதவன் தான்,  அவருக்கு நன்றி படத்தின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது அனைவரும் படத்திற்கு  ஆதரவு தர வேண்டும் “என்றார். 

நடிகர் அருண் விஜய் பேசிய போது, “எனக்கு இங்குள்ள அனைவரது மனநிலை தெரியும் நானும் அது போலத் தான் பல தடைகளைத் தாண்டி வந்தேன், படத்தின் டிரெய்லரை பார்த்தேன் நன்றாக உள்ளது மாதவன் சார் சிறப்பாகத் தனது பணியைச் செய்துள்ளார் வாழ்த்துக்கள், தயாரிப்பாளர் ஸ்ரீனி சார் மிகவும் நம்பிக்கையாகப் பேசுகிறார் நான் இப்படி ஒரு தயாரிப்பாளரைப் பார்த்து இல்லை , போனி கபூர் சார் கொடுத்த ஆதரவிற்கு நன்றி மற்றும் இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”என்றார் .

இயக்குநர் M R மாதவன் பேசிய போது, “சினிமா கண்டிப்பாக அனைவரையும் எட்டி உதைக்கும் நாம் தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும், படம் வெற்றி பெறுவது எனக்கு முக்கியம் என்பதை விடப் படத்தில் பணி புரிந்துள்ள 100 பேருக்குத் தான் முக்கியம்,  இந்தப்படம் பல கதாநாயகர்களிடம் சென்றது ஆனால் கார்த்திக் இப்படத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் , பல நண்பர்களின் முயற்சியால் தான் நான் இங்கு வந்தேன், 

தயாரிப்பார் ஸ்ரீனி சார் எனத் தந்தை போன்றவர், நான் கேட்ட அனைத்தும் செய்து கொடுத்தார், நான் வாழ் நாள் வரை அவரை மறக்க மாட்டேன்,
 
143 தயாரிப்பாளரை நான் அணுகியுள்ளேன் , ஆனால் இவர் தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார், என்னை இந்த தயாரிப்பாரிடம் அழைத்துச் சென்றது இயக்குநர் H வினோத் தான் அவருக்கு மிகவும் நன்றி.  கதாநாயகன் உதய் கார்த்திக் பெரிய நடிகர்களான அஜித், விஜய் போன்று நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரவு பகல் பாராமல் பணி செய்துள்ளார், ரமணா சார் மிகவும் எளிமையானவர் அவரது எளிமை மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கதாநாயகி தமிழ் பேசும் நடிகையாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் அது போல அவர் அழகாக நடித்துள்ளார், 
 
ஸ்ரீனி நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகப் பேசப்படும், ஒளிப்பதிவாளர் என்னுடைய பாதி வேலையை அவரே செய்தார், இந்தப் படத்திற்கு இசையமைத்த போபோ சசி அதிக மெனக்கெடலுடன்  உழைத்துள்ளார்.  இசை அருமையாக வந்துள்ளது.  இயக்குநர் மிஷ்கின் சாருடன் இணைந்து பணி செய்ய நீண்ட நாட்களாக முயற்சி செய்தேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை, எனினும் இங்கு  அவர் வந்ததற்கு நன்றி.
 

நடிகர் அருண் விஜய் சார் மற்றும் விஜய் குமார் சாருக்கு நன்றி, இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குச் சிறந்த பொழுது போக்காக இருக்கும் நான் கலைப் படம் பண்ணவில்லை காலாய் படம் பண்ணியுள்ளேன். என் வளர்ச்சிக்கு முழுமுதல் காரணமாக இருக்கும் என் அம்மாவிற்கு நன்றி. கண்டிப்பாக இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும், “என்றார். 

தயாரிப்பாளர் போனி கபூர் பேசிய போது, “இங்குப் பேசிய அனைவரும் படத்தைப் பற்றி நம்பிக்கையாகப் பேசினார்கள். இந்தக்குழு கோவிட் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தை நான் பார்த்து விட்டேன் மிக அற்புதமாக இருந்தது. உதய் கார்த்திக் மிக நன்றாக நடித்துள்ளார் டான்ஸ் ஃபைட் ரொமான்ஸ் எல்லாம் நன்றாக வருகிறது. நன்றாக முத்தம் கொடுக்கிறார் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.”என்றார். 
இயக்குநர் மிஷ்கின் பேசிய போது, “இந்தப் படம் பற்றி அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு பேசுகிறார்கள். டிரெய்லர் நன்றாக உள்ளது படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது. எனக்கு போனிகபூரைத் தெரியாது ஆனால் ஸ்ரீதேவியைத் தெரியும் இந்த உலகில் வாழ்ந்த மிகச்சிறந்த நடிகைகளுள் ஒருவர் அவர். இன்று போனிகபூர் சாரை சந்தித்தது மகிழ்ச்சி. இயக்குநர் ரமணா அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. இந்தக்குழு என்னை அழைத்த போது என்ன பெரிதாகச் செய்திருக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன் ஆனால் ஒரு குழுவாக அனைவரும் உழைப்பும் துடிப்பும் தெரிகிறது. புதுமையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் புரிகிறது படம் மிகப்பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இப்படத்தினை தயாரிப்பாளர் ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *