மது, புகை இல்லாத , ‘ தானா சேர்ந்த கூட்டம் ‘

ஸ்டுடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பில்  சூர்யா , தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா , கீர்த்தி சுரேஷ் ,

ரம்யா கிருஷ்ணன் ,தம்பி ராமையா , சுரேஷ் மேனன் , இயக்குநர் விக்னேஷ் சிவன் , ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் , கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

 நிகழ்ச்சியில்  விக்னேஷ் சிவன் பேசும்போது , ” தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாதான் படம்  சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். நான் ஸ்பெஷல்  26 படத்தின் உரிமையை வாங்கி. அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த “ காக்க காக்க “ போன்ற படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அந்த படம் தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன்.

இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள். கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர் , பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார்.  உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது. நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில்தான் இருக்கிறீர்கள்.

ரம்யா கிருஷ்ணன் , கமல் ஹாசனை போல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஆற்றலை பெற்றவர். அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.” என்றார் . 

சூர்யா பேசும்போது , ” அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து  அடுத்த பயணத்தை துவங்கி இருக்கும்  ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. எப்படி எனக்கு ஓவ்வொரு டைரக்டர் முக்கியமோ அதை போலவே என்னுடைய வாழ்கைக்கு ஓவ்வொரு தயாரிப்பாளரும்  முக்கியமோ அதில் பணிபுரிந்த அனைத்து  தொழில்நுட்ப கலைஞர்கள் முக்கியம்.

35 , 36 படங்களில் நிறைய நல்ல படங்களை கொடுக்க முடிந்துள்ளது என்றால்   அதற்கு பல தயாரிப்பாளர்கள் , இயக்குநர்கள் காரணமாக இருந்துள்ளனர். ரசிகர்கள் நிச்சயமாக முக்கியக் காரணமாக இருந்துள்ளனர். ஆனால் இன்னும் ஆதரவாக இருந்தது ஞானவேல் தம்பி என்னுடைய வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தேர்ந்தெடுத்து என்ன பண்ண வேண்டும் என்று அறிவுரை கூறுவார்.

எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்க்கையில்  முக்கியமாக அமைத்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இந்த கூட்டணி இணைந்தது. விக்னேஷ் சிவனை சந்திக்க போவதாக  இயக்குனர் ஹரி  சாரிடம் கூறினேன்.அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ணவேண்டும் என்று அவர் கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ணவேண்டும் என்று கூறினார்கள். 1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஓரு பாதையில் கதை செல்கின்றது.

முதல் சந்திப்பில் இருந்து தானா சேர்ந்த கூட்டம் என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது. உடன் பணிபுரிந்த அனைத்து  தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணிபுரிந்துள்ளார்கள். படத்தில் உள்ள  அனைத்து பாடல்களும்  மிக சிறப்பாக அமைத்துள்ளது.

7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் என்ற அறிவிப்பு எங்கள் படத்தில் வராது .

காரணம் அப்படி எந்த காட்சியும் இல்லாத அளவுக்கு   படத்தை எடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். அதற்காக   சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்” என்றார் . 

தயாரிப்பாளர் கே. ஈ . ஞானவேல் ராஜா தன் பேச்சில், ” தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை. அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா , விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி.

இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது. இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்க்கையில்  நான் எப்போதும் எடுக்க மாட்டேன்.

தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்று நாங்கள் கூறிவருகிறோம். ஆனால் அந்த படத்தில் உள்ள ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விக்கி இப்படத்துக்கு புதுமையான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார்.

ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்கி இந்த படத்துக்கு கொடுத்துள்ளார்.. அயன் படத்தில் வருவது போல் பிரெஷானா சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம்”  என்றார் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *