1994 இல் அனிமேஷன் வெர்சனில் வெளியான திரைப்படத்தின் புதிய பதிப்புதான் ‘தி லயன் கிங்’.
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது .
இதன் தமிழ் பதிப்பில் சித்தார்த் (சிம்பா), அரவிந்த்சாமி (ஸ்கார்), ரவிஷங்கர் (முஃபாஸா), ஐஸ்வர்யா ராஜேஷ் (நாளா), ரோகிணி, சிங்கம் புலி (டிமோன்), ரோபோ சங்கர் (பும்பா), மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். (கதாபாத்திரங்கள் அடைப்புக்குறிக்குள் !)
இந்த படத்தில் முதன்முறையாக ஃபோட்டோ ரியல் என்ற புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் .
“தமிழ் படங்களுக்கு டப்பிங் செய்யும்போது நிறைய சமாளிப்புகள் செய்வோம், ஆனால் இங்கு அதெல்லாம் இல்லை. மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது” என்கிறார் நடிகர் சிங்கம் புலி.
“என் முகத்தை மட்டுமே பார்த்து பார்த்து டப்பிங் செய்து போர் அடித்து விட்டது, இது கொஞ்சம் புதுமையாக இருந்தது.”என்கிறார் நடிகர் சித்தார்த்.