காட்டை ஆளும் சிங்க அரசன் மொசாபா . தனக்குப் பிறந்த குட்டி சிங்கம் சிம்பாவை தனக்குப் பின் ஆட்சிக்கு வரவிருக்கும் அரசனாக அறிவிக்கிறான் . அண்ணனுக்கு அடுத்து பதவிக்கு வர விரும்பும் தம்பி சிங்கமான ஸ்கார் , கழுதைப் புலிகளோடு சேர்ந்து சதி செய்து அரசனைக் கொன்று பழியை சிம்பா மீது போட்டு அவனை காட்டை விட்டே ஓட வைக்கிறான் .
வெகு தூரம் பயணிக்கும் சிம்பா அங்கே ஒரு பன்றி மற்றும் அணிலால் வல்லூறுகளிடம் இருந்து காக்கப் பட்டு அவர்களுடனே வண்டு புழுக்களை தின்று வளர்கிறான் .
இறந்த அரசனின் விசுவாசிகளான ஒரு பூசாரிக் குரங்கு, ஒரு பறவை , மற்றும் சிம்பாவின் சிறுவயது தோழியான நாளா மூவரும் சிம்பாவை கண்டு பிடித்த் மனதாலும் சிங்கமாக்கி கொண்டு வந்து சித்தப்பன் மற்றும் கழுதைப்புலி படைகளோடு மோத விட நடந்தது என்ன என்பதே இந்த லயன் கிங் .
சிம்பிள் அடிமைப் பெண் படத்தில் மிருகங்கள் நடித்தால் அதுவே லயன் கிங் .
முன்பு 2D அனிமேஷனில் தான் எடுத்த படத்தை அதே பெயரில் இப்போது அட்டகாசமான 3D அனிமேஷனில்
Jonathan Favreau இயக்கத்தில் Hans Zimmer இசையில்
Caleb Deschanel ஒளிப்பதிவில் வழங்கி இருக்கிறது டிஸ்னி .
சிறப்பான பிரேமிங், ஷாட்ஸ் கம்போசிஷன் , வண்ணம் எல்லாம் அருமை .
சிம்பாவுக்கு நடிகர் சித்தார்த், வில்லன் சிங்கத்துக்கு அரவிந்த் சாமி, நாளா பெண் குட்டி சிங்கத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் , ராணி சிங்கத்துக்கு ரோகினி , பறவைக்கு மனோபாலா , பன்றிக்கு ரோபோ ஷங்கர், அணிலுக்கு சிங்கம் புலி குரல் கொடுத்து இருக்கிறார்கள் .
மனோ பாலா, ரோபோ சங்கர் , சிங்கம் புலி சிரிக்க வைக்கிறார்கள் . ஸ்காருக்கு அரவிந்தசாமியின் குரல் ஆகா ஓகோ பொருத்தம்
டோரா புஜ்ஜி பாணியில் வரும் பாடல்கள் குழந்தைகளைக் கவரலாம் . ஆனால் கடமைக்கு தமிழ்ப்படுத்தி இருக்கிறார்கள் .
இடையில் கொஞ்சம் கொட்டாவி விட வைத்து அப்புறம் தம் கட்டி ஏறுகிறது
Jeff Nathanson அமைத்திருக்கும் திரைக்கதை .