ஜி எஸ் டி என்பது மாநில அரசுகளின் பல்லைப் பிடுங்கும் கொடிய வரி . ஐந்து மாநிலத்தின் வருவாயில் எல்லா மாநிலங்களுக்கும் கொடுப்பது மத்திய அரசின் பேடித்தனம்
இந்தியாவிலேயே ஜி எஸ் டி மூலம் அதிக பணம் தரும் மாநிலம் மகராஷ்டிரா
ஆனால் அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு வடக்கத்தி உணர்வோடு அள்ளிக் கொடுக்கும்
ஆனால் இரண்டாவதாக அதிக பணம் தரும் தமிழ்நாட்டுக்கு மீத்தேன் , அணு உலை கொடுக்கும்
முதலில் இந்திய ஸோ கால்டு ஜி எஸ் டி க்கு எதிராக பேசுகிற போராடுகிற அறிவாளிகள் கூட்டத்தில் சினிமாக்காரர்கள் சேர வேண்டும்
நமக்கு அந்த மான ரோஷம் இல்லை
ஒகே
மாநில அரசு வரிகள் போடக் காரணம்
இனி எல்லாவற்றுக்கும் மத்திய அரசிடம் கையேந்தக் கூடாது என்பதால்தான் .
ஆனாலும் தமிழக அரசு போட்டு இருக்கும் கேளிக்கை வரி அதிகம் .
இரண்டும் சேர்ந்து டிக்கட் விலை உயர்கிறது
ஆனால் சமாளிக்க ஒரு வழி உண்டு
தியேட்டருக்கு படம் பார்க்கத்தான் ரசிகன் வர்றான்
நிலம் மனை மதிப்பு காரணமாக பார்க்கிங்குக்கு ஒதுக்கப்பட்ட நிலம் காரணமாக பார்க்கிங் கட்டணம் வசூலிக்க வேண்டியதுதான் .
ஆனால் அது நியாயமாக இருக்க வேண்டும்
இந்த தியேட்டர் காரங்க படம் காட்டறாங்களா இல்ல பைவ் ஸ்டார் ரெஸ்டாரன்ட் நடத்துறாங்களான்னு தெரியனும் .
வெளியே விற்கும் விலையை விட அதிக விலை கொடுத்து தின்பண்டங்களை ஏன் விக்கணும் ?
அதும் ஊசிப் போன பப்சுக்கு ஊரு பட்ட விலை .
ஆக, பார்க்கிங் கட்டணம் குறைத்து , தியேட்டர் கேண்டீனில் எம் ஆர் பி விலைக்கு விற்றால் ரசிகனுக்கு காசு மிச்சமாகும்
அதிகரிக்கப்பட்ட டிக்கட் விலையை விட அவன் பார்க்கிங்குக்கும் கேண்டீனுக்கும் தரும் பணம் அதிகம் .
எனவே அதை முறை படுத்தினால் ரசிகனுக்கு டிக்கட் விலை உயர்வு சுமையாக இருக்காது .
விருப்பம் இருந்தா தியேட்டர் காரங்க தனியா உயர்ர்ர்ரர் தர உணவு விடுதி தனியா ஆரம்பிக்கட்டும்
தியேட்டரில் எம் ஆர் பி ரேட்டில் விற்கட்டும் .
முக்கியமா ஆன் லைன் புக்கிங் கொள்ளைக்காரங்க .
டிக்கட் விலை அம்பது ரூபா . ஆனா புக் பண்ண கட்டணம் நாற்பது ரூபா .
இதுல சீனியர் சிட்டிசன் ஹோமுக்கு நம்ம கிட்ட இருந்து ரெண்டு ரூபா default ஆ வசூலிக்கிறான் .
அந்த நாற்பது ரூபாய்ல நாலு ரூவா நீ குடுறா நாதாரி .
இதை எல்லாம் சரி செய்தால் போதும்
டிக்கட் விலை அதிகம் ஆகும் நிலையிலும் அவன் மிச்ச காசோடு வீட்டுக்கு
போவான்
அடிக்கடி தியேட்டருக்கு வருவான் .
இல்லன்னா எல்லாரும் தொழிலை மாத்திக்குங்க .

