நடிகர் வாராகி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’ .
முழுக்க முழுக்க அரசியல் கதைகளம் கொண்டு இப்படத்தின் முதல் தோற்ற விளம்பர வடிவங்கள் இரண்டு வெளியிடப்பட்டன.
நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே எஸ் கே பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே ராஜன் உடனிருந்தனர்.
படத்தைப் பற்றி பேசிய வாராகி , ” ஒரு கட்சியின் ஆண் பிரமுகருக்கும் இன்னொரு கட்சியின் பெண் பிரமுகருக்கும் உள்ள உறவை சொல்லும் கதைக் கருவைக் கொண்ட படம் இது .
அந்த ஆண் பிரமுகருக்கு ஒரு மனைவியும் பெண் பிரமுகருக்கு ஒரு கணவரும் உண்டு என்ற ரீதியில் கதை போகும் அரசியல் சர்ச்சைகளை நிச்சயம் இப்படம் உருவாக்கும். காரணம் கதை அப்படி .
காமராஜர், கக்கன் போன்ற உன்னதமான தலைவர்களை கொண்டிருந்த நாடு இது ஆனால் இன்று ஒழுக்கம் குறைந்து விட்டது என்பதை சொல்லும் படம் இது .
அதே நேரம் இது தனிப்பட்ட எந்த ஒரு நிஜமான மத்திய மாநில மக்கள் பிரதிநிதிகளையும் குறிக்காது
இரண்டு நாயகர்களிடம் இக்கதையை கொண்டு சென்றேன். நடிக்க மறுத்தார்கள். ஆகவே, இப்படத்தில் நானே நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு அரசியல்வாதி என்றாலே நல்லவனாக இருக்க வேண்டும் இப்போதைய காலகட்டத்தில் அப்படி ஒருவரை பார்ப்பது அரிதாகிறது.
இன்னும் இரண்டு மாதத்தில் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்
‘சிவா மடியில புஷ்பா’ என்றால் இன்னும் தெளிவா கதை புரியுமோ ?