டைட்டில் ‘ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

நடிகர் விஜித்  நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ டைட்டில் ‘ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் ஸ்டுடியோவில் படக்குழு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள  நடைபெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு வந்த அனைவருக்கும் தனது நன்றியைப் பதிவு செய்தார். 
 
அடுத்துப் பேசிய ஸ்டுடியோ 9 R K சுரேஷ்,  ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதையும், குறிப்பாக ஒரு சிறிய படத்தை விளம்பரம் செய்து திரையரங்கில் வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதையும்  பதிவு செய்தார். மேலும்  படத்தில் நடிக்கும் நடிகர்கள் அந்தந்த படத்தின் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்றார்
மைம் கோபி படத்தின் பெயரே டைட்டில் என்பதனால் பெயருக்கான அர்த்தம் என்ன என்று யாரும் கேட்க முடியாது என்றார். 
 
இயக்குனர் விக்னேஷ்  கதாநாயகன் விஜித்துடன் தனது நட்பு சிறுவயதில் இருந்து எவ்வாறு தொடங்கியது தொடர்கிறது என்பதை சொன்னார். 
 
நடிகர் ஜீவா மற்றும் ராஜ்கபூர்இருவரும்விஜித்தை வாழ்த்தியதுடன் , சிறிய படங்களை  வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதை சொன்னார்கள். 

இயக்குனர் ரகோத் விஜய் பத்திரிகையாளர்களிடம் இந்த படத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இசையமைப்பாளர் அனல் ஆகாஷ் தனது தாய் மற்றும்  சீதா பாட்டிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். “என்னால முடியாது என்று நான் நினைத்த பொழுது என்னை நம்பி என்னால முடியும் என்று என்னை நம்பியவர் என் தாய். ஆறு படம் நின்னு போச்சு..இது ஏழாவது படம்..நிச்சயம் வெற்றி பெறும்” என்று கூறியதோடு படத்தில் இருந்து ஒரு பாடலை பாடினார். 
டத்தோ ஶ்ரீ ராதா ரவி பேசும்போது, , ” ஒரு படம் என்றால் அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் நடிகர்கள் தானாக தங்களது சம்பளத்தை  ஏற்றிக் கொள்ளவில்லை . ஆனால்  ஏற்றிக்கொடுத்தால் வாங்கி கொள்ளாமல் இருக்கவா முடியும்? ஒரு படத்தை காப்பாதனும்னா அது தமிழ்நாட்டு மக்களால் மட்டுமே முடியும்.

எல்லாரும் படத்த திரையரங்கில் பாக்கணும, OTT யில் பாத்தா வேலைக்கு ஆகாது. அதோடு நிறுத்தாமல், திரையரங்கம் சென்றால் படம் பார்த்து விட்டு வர வேண்டுமே தவிர, பாப்கார்ன், ஸ்நாக்ஸ்  விலை அதிகம்னா ஏன் வாங்கணும்? வாங்காம வாங்க .
ஒரு பெரிய பெயர் போன தயாரிப்பு நிறுவனம் நினைத்தால் வெற்றி படம் எடுக்க முடியும் என்பதனை தாண்டி தமிழன் படம் எடுத்தால் வெற்றி பெறவேண்டும் என்பதே நம் லட்சியமாக இருக்க வேண்டும்.  நடிகர்கள் தாடி வைத்திருப்பது தேவையற்றது  தாய் தந்தையரைப் பேணிக் காக்க வேண்டும் “என்றார். 
 
 மிரட்டல் செல்வா,”இந்தத் திரைப்படத்தில் விஜய் அஜித் படத்திற்கு நிகராக சண்டை காட்சிகள் இருக்கிறது. “என்றார். இயக்குநர் பேரரசு, ராதா ரவியின் பேச்சை கண்டித்துப் பேசியதோடு, இயக்குனர் பாக்யராஜின் சிறப்பம்சங்கள் பற்றியும்,   கூறினார். 
பிறகு பேசிய RV உதயகுமார் திரையரங்கில் டிக்கெட் எடுப்பதற்கு ஆன்லைன் வழித்தளம் மட்டுமே பயன்படும்படி செய்ய வேண்டும்  என்று  மத்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைத்தார் பயன்படுத்த வேண்டும்.
 
கே பாக்யராஜ் தனது பேச்சில், “ஒரு படத்தின் தலைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதுவே மக்களிடம் ஒரு திரைப்படத்தை கொண்டு சேர்க்கும். குறிப்பாக பெண்களை ஈர்க்கும் வண்ணமே ஒரு தலைப்பு இருக்க வேண்டும் என்று அந்த காலத்தில் ஒரு கருத்து நிலவி வந்தது.
 
எனது படத்தில் கூட நிறைய எதிர்மறை தலைப்பு வைக்கின்றேன் என பல்வேறு விதமான விமர்சனங்கள் எனக்கு எதிராக வரும். ‘ சுவரில்லாத சித்திரங்கள் ‘ என்ற எனது படம் இது போன்ற எதிர்மறை அலைகளை மீறி வெற்றி பெற்றது.அனைத்து படங்களிலும் தலைப்பு என்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும், அதே சமயத்தில் மக்களை யோசிக்க வைக்கும் வண்ணம் இருக்க வேண்டும்”.என்றார். 

 இயக்குநர் S P முத்துராமன், ஒரு திரைப்படத்தை எவ்வாறு பிரபலமடைய செய்யலாம் என்பதனை விவரித்தது மட்டும் இல்லாமல் திரை உலகில் காலடி எடுத்து வைப்பதற்கு பொறுமை மற்றும் நம்பிக்கை வேண்டும். ஒண்ணு நாம் ஒன்று கன்வின்ஸ் ஆகனும் இல்லை என்றால் கன்வின்ஸ் பண்ணனும். விட்டு கொடுத்தால்தான் படம் பண்ண முடியும்” என்றார். 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *