‘கொடை’ பட இசை வெளியீட்டு விழா

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில்,  வளரும் இளம் திறமையாளர்களின்  கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம்  ‘கொடை’ .  இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். 
 
5 பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார். தமிழ்த் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  நடந்தேறியது. 
 
இவ்விழாவினில்  இசையமைப்பாளர் சுபாஷ் கவி பேசியபோது, “இந்தப் படத்தில் அதிகபட்சமாக லைவ் சவுண்ட்தான் பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் இதுவரை பணிபுரிந்த பல மூத்த இசை கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். படத்தின் பாடல் வரிகளை எழுதியவர்களுக்கும், பாடலைப் பாடியவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். எங்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்”என்றார். 
நடிகர் கார்த்திக் சிங்கா பேசியபோது, “இசையமைப்பாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. அனுபவம் மிக்கவர் போல இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னை இதில் நடிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார், அது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது. இந்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். “என்றார். 
 
நடிகை அனயா, “தமிழில் இது என் முதல் படம். நான் இந்த திரைப்படம் மூலமாக நிறைய கற்றுகொண்டேன். கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான்  எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி”என்றார். . 
 
நடிகர் ராதாரவி பேசியபோது, “இசையமைப்பாளருக்கு முதல் படம் போன்று தெரியவில்லை, அவருடைய இசை ஈர்க்கும்படி உள்ளது. இளைஞர்கள் திரைத்துறைக்கு வந்து ஜெயிக்க வேண்டும். இந்த படத்தின் கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார், ரோபோ சங்கர் மிகச் சிறந்த கலைஞன்.அவன் பெரிய ஆளாக வரவேண்டும். சிங்கமுத்து என் குடும்பத்தில் ஒருத்தன் அவன் மகன் நடிகனாகியிருப்பது மகிழ்ச்சி. என் குடும்பத்திலிருந்து யாரும் நடிக்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால்தான் நம் பெயர் நிலைக்கும்.  நாயகனுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த படத்திற்கு உங்களது ஆதரவை கொடுத்து, படத்தை வெற்றி பெற வையுங்கள்.”என்றார். 
 
நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியபோது, “இந்த படத்தில் எனக்கு சிறிய ரோல்  என்றாலும், அது நல்ல கதாபாத்திரமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் என் கதாபாத்திரத்தை வசனங்கள் வாயிலாகவும், நடிப்பு வாயிலாகவும் மெருகேற்ற படக்குழு நிறைய  உதவி செய்தனர். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது, அதில் சில முக்கிய கதாபாத்திரங்களுடன் நான் நடித்துள்ளேன். படத்தின் நாயகன் கார்த்திக் மிகப்பெரிய நாயகனாக மாற வேண்டும், அதற்கு உங்கள் ஆதரவு தேவை.”என்றார். 
 
நடிகர் ரோபோ சங்கர் பேசியபோது, “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. பாடல்கள் எல்லாம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். கதாநாயகன் கார்த்திக் நடனத்திலும், நடிப்பிலும் மிரட்டலான பங்களிப்பை கொடுத்துள்ளார். படத்தில் நான் முக்கிய பாத்திரத்தில் வருகிறேன். “என்றார். 
 
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியபோது, “படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமையாக இருந்தது. இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துகள். கொடை  என்ற டைட்டிலே நன்றாக இருக்கிறது, இந்த காலத்தில் யாரும் தமிழில் நல்ல டைட்டில் வைப்பதில்லை, படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.  இயக்குனருடைய பணி சிறப்பாக வந்துள்ளது என்பது படத்தின் காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடையும், அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.”என்றார். 
தயாரிப்பாளர் அம்மா T சிவா பேசியபோது, “ஒட்டுமொத்த படக்குழுவின் கூட்டு முயற்சியாக இந்த படம் உருவாகியுள்ளது. எம் எஸ் பாஸ்கர் போன்ற சிறந்த நடிகர்களை திரையில் பார்ப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தை சரியான முறையில் புரமோட் செய்து, மிகப்பெரிய வசூலை, படக்குழு ஈட்ட வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள். “என்றார். 
 
இயக்குனர் எழில் , “படத்தின் டிரெய்லர் ஈர்க்கும் படி அமைந்து இருந்தது. படத்தின் ரீரெக்கார்டிங் கதையோட்டதோடு ஒன்றி  உள்ளது. இந்த படம் வெற்றி பெரும் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. படக்குழுவினர் உடைய உழைப்பு பாடல்களிலும், டிரெய்லரிலும் நன்றாக தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள். “என்றார் 
 
இயக்குனர் ராஜா செல்வம் பேசியபோது, “மிகப்பெரும் ஜம்பாவான்கள் எங்கள் படத்திற்கு வந்து வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி. இப்படம் ஒரு கூட்டு முயற்சி. பல தடைகளைக் கடந்து படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவளியுங்கள் “என்றார். 
தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம் 
 
தயாரிப்பு நிறுவனம்: எஸ்எஸ் பிக்சர்ஸ் 
எழுத்து இயக்கம் : ராஜசெல்வம்
இசை: சுபாஷ் கவி 
ஒளிப்பதிவு: அர்ஜுனன் கார்த்திக்
எடிட்டர்: G.சசிகுமார் 
கலை: K.M.நந்தகுமார் 
நடனம்: தினேஷ், ராதிகா
சண்டைக்காட்சிகள்: பீனிக்ஸ் பிரபு ஆடைகள்: P.ரெங்கசாமி 
ஒப்பனை: P.S.குப்புசாமி 
ஸ்டில்ஸ்: மோகன் 
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *