பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவீஸ் தயாரிப்பில் அதர்வா, தான்யா, அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த் நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கி இருக்கும் படம்.
மனசாட்சிப் படி வேலை செய்த காரணத்துக்காக , தண்டணையாக காவல் துறையின் உள் விவகாரங்களை கண்டு பிடிக்கும் பொறுப்புக்கு மாற்றப்படுகிறார் ஒரு காவல் அதிகாரி ( அதர்வா). தவறு செய்கிற போலீஸ் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டு பிடிக்கிற வேலை. நாயகனின் அப்பா (அருண் பாண்டியன்) கடமை தவறாமல் பணியாற்றியும் காவல் துறையால் களங்கம் சுமத்தப்பட்ட போலீஸ்காரர்.
ஒரு நிலையில் நாயகன் பெண் கடத்தல் விவகாரம் ஒன்றை விசாரிக்கப் போக, அது குழந்தைக் கடத்தல் நெட் வொர்க்கில் கொண்டு போய் நிறுத்துகிறது. . அங்கே அவர் சந்திக்கும் ஒரு நபர்தான் அவரது அப்பாவின் நிலைமைக்கும் காரணம் . அப்புறம் நடப்பது என்ன என்பதே படம்.

அதர்வா கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார். அப்பா மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப் போராடும் வகையில் நல்ல நடிப்பு. சண்டைக்காட்சிகளில் மேலும் முன்னேற்றம்.
அவரும் சின்னி ஜெயந்த் , முனீஸ்காந்த், நிஷா , அன்புதாசன் ஆகியோரும் இருக்கும் ரெஸ்டாரன்ட் ஏரியா வித்தியாசம்.
காதல் டூயட்கள் இல்லாத நிலையிலும் நாயகி தான்யாவின் காட்சிகளும் நடிப்பும் சிறப்பு.
சின்னி ஜெயந்த பண்பட்ட நடிப்பால் கவர்கிறார் . முனீஸ்காந்த், நிஷா இருந்தும் காமெடியும் இல்லை. காமெடி என்ற பெயரில் சோதனையும் இல்லை.

ராகுல் தேவ் ஷெட்டியின் வில்லத்தனங்கள் பெரிதாக எடுபடவில்லை. கிளைமாக்சில் அருண் பாண்டியன் நடிப்பு சிறப்பு.
தேவையற்ற காட்சிகளை நீக்கத் தவறிய படத் தொகுப்பு. கம்பியூட்டர் ஹேக்கிங் என்ற பெயரில் ஓவராக பூ சுற்றல்கள் இரண்டாம் பாதி இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்
ஒளிப்பதிவு சிறப்பு. பின்னணி இசையில் கவர்கிறார் ஜிப்ரான். தெரிந்த கதைதான் என்றாலும் விவரணைகளில் கவர்கிறார் இயக்குனர் . இடைவேளை மற்றும் கிளைமாக்சில் வரும் சண்டைக்காட்சிகள் சிறப்பு.