பபூன் @ விமர்சனம்

ஸ்டோன் பெஞ்ச் சார்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க, வைபவ் , அனகா, ஆந்தகுடி இளையராஜா, ஆடுகளம் நரேன், கஜ ராஜ்,  நடிப்பில் அசோக் வீரப்பன் இயக்கி இருக்கும் படம். 

பபூன் வேடத்தில் கூத்துக் கட்டும் குடும்பத்தில் பிறந்த தென் மாவட்ட இளைஞன் ஒருவன் ( வைபவ்) , அவனது நண்பன் ஒருவன் ( ஆந்தகுடி இளையராஜா) இருவரும் தொழில் நசிவால் அயல்நாடு போய் சம்பாதிக்க முடிவு செய்து , அதற்குப் பணம் சேர்க்க லாரி டிரைவராக வேலை செய்கிறார்கள் . அந்த லாரியில் அவர்களுக்கே தெரியாமல் போதைப் பொருள் கடத்தப்படுகிறது . அதற்கு பொறுப்பான தனபால் என்ற ரவுடி முக்கிய அமைச்சருக்கு ( நரேன்) நெருக்கமான ஆள். 

அமைச்சருக்கும் முதல்வருக்கும் ( வ. ஐ ச. ஜெயபாலன்) ஏற்படும் அரிசயல் பனிப்போரில் அமைச்சரைத் தட்டி வைக்க முதல்வர் டி எஸ் பி ஒருவர் மூலம் தனபாலைத் தூக்க முயல, அதில் நாயகனும் நண்பனும் பகடைக்காய் ஆகின்றனர். 
இலங்கை அகதிகள் முகாமில் வாழும் நாயகியின் ( அனகா) உதவியோடு நாயகன் தப்பிக்க முயல , நடந்தது என்ன என்பதே இந்தப் படம் . இலங்கை தமிழர்களின் சோகத்தை சொன்னதற்காக இயக்குனருக்கு முதலில் பாராட்டுகள். 

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில்  அட்டகாசமான லொக்கேஷன்களில்  விசுவல் நன்றாக இருக்கிறது . 

சந்தோஷ் நாராயணன்  துள்ளலான பாடல்கள் கொடுத்துள்ளார் . அவற்றை ஒழுங்காகப் பயன்படுத்தவில்லை 

ஆந்தகுடி இளையராஜா நடிப்பில் கவனிக்க வைக்கிறார் . 

அரசியல் விளையாட்டில் தனி மனித பாதிப்பு என்பது புதிய விசயமும் இல்லை . ரொம்ப துவைக்கப்பட்ட விசயமும் இல்லை. அது ஒகேதான் . ஆனால் திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யமும் அழுத்தமும் கொடுத்து இருக்கலாம். 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *