திரிஷாவின் ஃபாரின் ‘மோகினி ‘

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரிஷா நடிக்க , மாதேஷ் இயக்கி இருக்கும் படம் மோகினி . ஆமாங்கோ இது திரிஷா பேயாக வரும் படம் . 

“புத்தர் கோவில்  இரண்டாயிரம் ஆண்டு முன்பு புதைக்கப்பட்ட … ” என்று மிரட்டலாகவே ஆரம்பிக்கும் டிரைலர் விஷுவலாகவும் மிரட்டுகிறது . 
 
” லண்டனில் நடக்கும் கதை. அதனால் படம்  வெளி நாட்டில்தான் . ஆனா நம்மூரு ரசிகர்களுக்கான கதை சில காட்சிகளை பாங்காக் , போர்த்துகீஸ் போன்ற நாடுகளில் எடுத்து இருக்கிறோம் .
ஆனால் கதைப்படி அவற்றையும் லண்டன் என்றே காட்டுவோம் ” என்கிறார் இயக்குனர் மாதேஷ். 
 
“மிக ஒல்லியான திரிஷாவை பேயாகக் காட்டுவதில் சிரமம் இல்லையா ?” என்றால் ” சேச்சே  இல்ல சார். அதான் நல்லா இருந்தது .  அந்தரத்தில் பறக்க ,  கயிறு கட்டித் தூக்க எல்லாவற்றுக்கும்  பொருத்தமான இருந்தது. அவரும் சளைக்காமல் நடித்தார் . இன்னும் ஆக்ஷன் சீக்வன்ஸ் என்ன செய்யவும் தயார் என்று பெரும் ஒத்துழைப்பு கொடுத்தார் . வேறு படங்களை தள்ளி வைத்தார் .  ஆறு மாதங்கள் முழு  ஒத்துழைப்பு கொடுத்தார் . திரிஷாதான் மோகினிக்கு பெஸ்ட் ஆப்ஷன்.  
 
இங்கிலாந்தில் உள்ள பலருக்கே தெரியாத ஒரு முக்கிய அருவியை எல்லாம் கண்டு பிடித்துப் படமாக்கி இருக்கோம் . படம் வந்த அப்புறம் அது பெரிய விஷயமா பேசப் படும் ” என்கிறார் மாதேஷ் . 
 
பின்னாடி கண்ணாடி போட்டிருக்காரே .. (அட முன்னாடிதாங்க !)  அவர்தான் மாதேஷ்

திரிஷா மலையாளம் எல்லாம் பேசறாரே என்றால் கதைப்படி அதற்கு காரணம் இருக்காம் . 

 
தயாரிப்பாளர் லக்ஷமன் என்ன சொல்கிறார் ? 
 
” பாடல் காட்சிகளுக்காக சில நாடுகள் போய் இருக்கோம் .  சிஜி க்கு நிறைய செலவு ஆச்சி .  பாரின் எக்ஸ் சேஞ்ச் மாற்றத்துல சில சமயம் ஒரு கோடி எல்லாம் அனாயாசமா மாயம் ஆகும் . அதாவது நாலு கோடி செலவாக வேண்டிய இடத்தில் திடீர்னு அஞ்சு கோடி ஆகும் . ஒரு கோடி சும்மா காத்துல கரைஞ்சா மாதிரி போய்டும் . இருந்தாலும் நல்ல கதை . படம் நல்லா வந்திருக்கு . ரிலீஸ்க்கு பொருத்தமான நாள் பார்க்க ஆரம்பிச்சு இருக்கோம் ” என்கிறார் . 
 
வாழ்த்துகள் ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *