நடிகர் , உடற்பயிற்சி ஆசிரியர் , தனித் திறமை சாதனையாளர் மற்றும் பயிற்சியாளர் என்று பன்முகம் கொண்டவர் அம்புலி கோகுல்நாத்.
கோகுல் நாத்தின் யுனிக் டேலன்ட் அகாடமியில் பலநூறு சிறுவர் சிறுமியர் , இளைஞர்கள், மாணவ மாணவியர் தற்காப்புக் கலை , உடற்பயிற்சி, மற்றும் தனித்திறன் வளர்ப்புகளில் பயிற்சியும் விருதும் பெறுகின்றனர்.
அந்த வகையில் அண்மையில் மேற்படி மையத்தில் இருந்து 15 கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன .
கோகுல் நாத் நான்கு சாதனைகளையும் பயிற்சியாளர் நாகராஜ் ஒரு சாதனையையும் பல்வேறு சிறுவர் சிறுமியர் பதினான்கு சாதனைகளையும் நிகழ்த்தி இருந்தனர் .
சாதித்த அனைவருக்கும் விருதுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேசும் கலந்து கொண்டு பாராட்டி விருது வழங்கினர் .
அவர்கள் முன்பு உடல் திறன் சாதனைகள் செய்து காட்டப்பட்டன . (அதே நேரம் நீங்க கூடவா கலை நிகழ்ச்சி என்ற பெயரில் டம்ளர் குத்து, சொம்பு குத்து என்று குத்தாட்டம் போட வேண்டும்?)
முதல்வர் பழனிச்சாமியும் கோகுல்நாத் உள்ளிட்ட சாதனையாளர்களை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
வருங்காலத் தலைமுறைகள் பெரும்பாலும் உடலுக்குப் பயிற்சி அற்ற கல்வி முறையில் சிக்கி இருக்கும் உடல் திறன்களின் மீது இளைய தலைமுறைக்கு ஆர்வம் ஏற்படும் வகையில் செயல்படும் கோகுல்நாத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியன .