பொதுவாக மலையாளத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் ஓடாது . ஆனால் அந்த செண்டிமெண்டை உடைத்து இருக்கிறது கல்யாணி பிரியதர்ஷன நடிப்பில் அசத்தி இருக்கும் லோகா.
இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசி இவர்களின் மகள் மற்றும் அழகும் திறமையும் உள்ள நடிகை என்று இருந்தாலும் அறியாக எதுவும் அமையாமல் தடுமாறிக் கொண்டிருத்த கல்யாணி பிரியதர்ஷனுக்கு உச்சத்தில் நட்சத்திர அந்தஸ்தை கொடுத்துள்ள படம்.
வேம்பயர் ஹீரோ படம், அவரை தீர்க்கும் பெண். எனவே பெண் சூப்பர் ஹீரோ படம்
கொஞ்சம் சீனியர் ரசிகர்களுக்கு பழைய கதைதான் என்றாலும் இன்றைய இளைஞர்கள் பாராட்டுகிறார்கள்.
பரபர மலையாள சூப்பர் ஹிட் பெண் படம்.
பிரேமலு ஹீரோவின் கள்ளங் கபடின்மை,இளையராஜா பாடல்கள், கல்யாணியின் அழகு ஆக்ஷன் நல்ல மேக்கிங் ஆகியவை பெரிய பிளஸ். சாண்டி கேரக்டர் போதாமை,
கிளைமாக்ஸ் குழப்பம் என்றாலும் கல்யாணி அசத்தல். நீலி கதை அசத்தல், சிறந்த கமர்ஷியல் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
சில கோடியில் எடுக்கப்பட்ட படம் நூறு கோடி வசூலை தாண்டி இருக்கிறது .
கல்யாணி பிரியதர்ஷன் காட்டில் மழை.