ட்ரூ சோல் பிக்சர்ஸ் சார்பில் ரூபேஷ் குமார் தயாரிக்க, ராகவ், லூதியா, திவ்யன், ஆர் என் ஆர் மனோகர், சபீதா ஆனந்த் மற்றும் பலர் நடிக்க, டாவின்சி சரவணன் இயக்கி இருக்கும் படம் வி.
ஐந்து காதல் ஜோடிகள்.. அனைவரும் நண்பர்கள் அமைதிப் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஜாலி ட்ரிப் வருகின்றனர்.
V.COM என்ற இணையதளம் ஒன்று பிறந்த தேதியைச் சொன்னால் இறக்கும் தேதியைச் சொல்கிறது. இந்த பத்து பேரும் அன்றைய தினத்திலேயே இறக்கப் போவதாகவும் சொல்கிறது.
சாலையில் ஜோடிக்கொரு பைக்கில் வரும்போது ஒரு லாரி டிரைவருக்கும் இவர்களுக்கும் ஓவர் டேக் விசயத்தில் ஈகோ வெடிக்க, இவர்களைக் கொல்வது போல லாரியை டிரைவர் ஓட்டுகிறான்.
ஒரு நிலையில் லாரியிடம் இருந்து தப்பி, வழியில் உள்ள ட்ரீ டாப் என்ற ரிசார்ட்டில் தங்கப் போகின்றனர். அங்கே சில இயல்பற்ற நிகழ்வுகள் .
பத்து பேரில் உள்ளோரும் ஒவ்வொருவராகக் கொல்லப்பட கடைசியில் யாராவது தப்பினார்களா? கொலைகள் நடப்பது ஏன்? என்பதே இந்த வி .
குறைந்த செலவில் ஒரு மர்ம, திகில், கிளாமர் படம்.
லொக்கேஷன்கள் பலம் .
சுமார் முப்பத்து வருடங்களுக்கு முன்பு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த டுயல் படத்தை அப்படியே சுட்டு விட்டார்களோ என்று முதல் முக்கால் மணி நேரம் எண்ண வைத்து விட்டு, அப்புறம் வேறு கதைக்குப் போகின்றனர்.
பல வழக்கமான காட்சிகள் .
இளங்கோ கலைவாணனின் பின்னணி இசை சில இடங்களில் கவனிக்க வைக்கிறது .
அலட்சியமாகப் படம் பார்த்துக் கொண்டு இருப்போரை அட என்று நிமிர்ந்து உட்கார வைத்து அடடே என்று பாராட்ட வைக்கிறது கிளைமாக்ஸ் திருப்பம்.
கொலைகளுக்குக் காரணமாக குற்றம் நடப்பது உள்ளிட்ட பல இடங்களில் படம் முழுக்க லாஜிக் மிஸ்டேக் யொருந்தாலும் ( கதவை மூடிக் கொண்டு பத்திரமா இருங்க . வெளிய வராதீங்க ” என்று சொல்லி விட்டு ஒருவான் வெளியே போக, உள்ளே இருக்கும் பெண் கதவை சும்மா சார்த்தி விட்டு வருகிறார். தாப்பா போடக் கூடாதா பாப்பா?)
கிளைமாக்ஸ் விசயத்தில் காரண காரியங்களை அழகாகச சொல்கிறார் திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான டாவின்சி சரவணன் .
பாலியல் கொடுமைகளுக்கு எதிரான கிளைமாக்ஸ் பாராட்டுப் பெறுகிறது.
மொத்தத்தில் வி …… ஷயம் இருக்கு.