வாழ்வு தொடங்குமிடம் நீதானே @ விமர்சனம்

பரணிதரன் , செந்தில் குமார் இவர்களின் ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்காக , நீலிமா இசை மற்றும் இசை இருவரின் தயாரிப்பில் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் , அர்ஷத் நடிப்பில் ஜெயராஜ் பழனியின் எழுத்து இயக்கத்தில் உருவாகி செப்டம்பர் 28 அன்று ஷார்ட் பிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் படம். 

கட்டுப்பெட்டியான இஸ்லாமிய சமூகப் பெண் ஒருவருக்கும் (நிரஞ்சனா நெய்தியார்)  நவநாகரீக இளம்பெண் ஒருவருக்கும் (  ஸ்ருதி பெரியசாமி) தன் பாலின ஈர்ப்பில் காதலும் உறவும் ஏற்பட , 
அதை அறிந்து கொந்தளிக்கும் இஸ்லாமிய குடும்பம் இரு பெண்கள் மேலும் கோபம் கொள்ள , ஒரு நிலையில் மகளுக்கு அவசரம் அவரசமாக ஒரு மாப்பிளையை பார்த்து நிக்கா செய்து வைக்க வாப்பா  முயல ,  என்ன நடந்தது என்பதே இந்தப் படம் . 
 
மிகக் குறைந்த செலவில் முடிந்தவரை தொழில் நுட்ப சிறப்போடு , ‘தன் பாலின ஈர்ப்பு என்பதும் ஒருவித இயல்பு நிலையே.; அவமானமில்லை’  என்பதை  நெத்தியடியாக உணர்த்தும் ஒரு படத்தைக் கொடுத்துள்ளனர் . 
படத்தில் வரும் பெண்கள் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்க, ஆண்கள் அனைவரும் செயற்கையான நாடகத்தனமான நடிப்பைக் கொடுத்துள்ளனர் . தயாரிப்பளர் இசையிடம் கேட்டால் பட்ஜெட் பிரச்னைதான் சார் என்றார் .  இதே பட்ஜெட்டுக்கு நல்ல புதிய நடிகரகளைக் கண்டறிந்து  பயன்படுத்தி இருக்கலாம் சார் .நன்றாகவே நடித்திருக்கிறார் என்றாலும் ஸ்ருதி பெரியசாமியின்  தோற்றம் இதற்குப் பொருந்தவில்லை . இன்னும் கொஞ்சம் அப்பாவித்தனமும் இது போலவே அப்பாவித்தனமும் கொண்ட ஒரு நடிகை இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் . 
 
எனினும் சொல்லப்பட வேண்டிய கதை. பார்க்க வேண்டிய படைப்பு .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *