வில் சுசீந்திரன் ; அம்பு ரமேஷ் சுப்ரமணியன்


GN3A9041

ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே ,  சம்ஸ்கிரிதி ஷெனாய் ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடிக்க , இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க,  சுசீந்திரனின் நீண்ட நாள் நண்பர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ள படம் ‘வில் அம்பு’ .

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ”சுசீந்திரன் இந்த மேடை எனக்கு முதல் மேடை போல் உள்ளது , வெண்ணிலா கபடிக் குழு படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் நிற்கும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ அதே அளவுக்கு எனக்கு இப்போதும் மகிழ்ச்சியாக உள்ளது .

இப்போதும் கூட வெண்ணிலா கபடி குழு மேடையில் நிறப்பது போல் உள்ளது. இந்த வில் அம்பு படம் எனக்கும் ரமேஷ் சுப்பிரமணியனுக்கும் இடையிலான  பதினாலு வருட நட்பின் சாட்சி”  என்றார் .

GN3A9115

கவிஞர் வைரமுத்து பேசும் போது ”இயக்குநர் சுசீந்திரன் தன்னை ஒரு சிறந்த இயக்குநராக நிரூபித்துவிட்டு , தற்போது  ஆலமரமாக இருந்து பல விழுதுகளை உருவாக்கி வருகிறார். ஆற்றல் மிகுந்த தன் நண்பர்களுக்கு வெளிச்சம் தந்து கொண்டு இருக்கிறார்.

இப்போது தமிழ் சினிமாவில் அழுக்கை அழகாக காட்டி வருகிறார்கள். இது நிச்சயம் பாராட்டத் தக்க ஒரு விஷயம்.  அழுக்கை அழகாக காட்டும் இந்த விஷயம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த படம் நிச்சயம் மிக பெரிய வெற்றி பெறும்” என்றார். 

நடிகர் சூரி “நான் சுசீந்திரன் அண்ணாவின் மூலம் தமிழ் சினிமாவில் காலெடுத்து வைத்தவன். நான் மட்டும் அல்ல விஷ்ணு உள்ளிட்ட பலர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக வந்தவர்கள்தான்.

IMG_3828

இப்போது அண்ணன் தயாரித்துள்ள வில்அம்பு படத்தில் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார் , அனிருத் , டி.இமான் ஆகியோர் பாடியுள்ளனர். வெற்றி பெற்ற  இசையமைப்பாளர்கள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடி இருப்பதே படத்துக்கும் , பாடலுக்கும்  கிடைத்த மிகபெரிய வெற்றி” என்றார். 

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும் போது “இந்தப் படத்தில் நான் எழுதிய பாடல் ‘குறும்படமே உயிர்க்கிறாய்’ என்ற பாடல்.  இந்த பாடலின் சூழலை இயக்குநர் ரமேஷ் சொல்லும் போது , ‘இது குறும்படம் எடுக்கும் நாயகன் பாடும் பாடலாக அமைய வேண்டும்’ என்று கேட்டார். உடனே இந்தப் பாடலை  குறும்படமும் அதை சார்ந்த விஷயமும் இருக்கும் வகையில் உருவாக்கினேன். பாடல் நன்றாக வந்துள்ளது” என்றார்.

படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் “இந்த படத்தின் இசையமைப்பாளர் நவீனின் பாடல்கள் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த படம் வெற்றி பெற அவர் முக்கிய காரணமாக இருப்பார்” என்று கூறிவிட்டு. இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறினார். 

பாடல்களு வெளியிட்ட இயக்குனர் இமயம் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது ,

IMG_3853

“சுசீந்திரன்தான் என்னை முதலில் நடிக்க வைத்தார். அவர் மிக சிறந்த இயக்குநர் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

ஜி.வி.பிரகாஷ் உடன் நானும் அமர்ந்திருப்பது , நானும் அவரை போல் வெர்ஜின் பாய்தான் என்பதை நிரூபிக்க உதவுகிறது. . இப்போது பாடல்களை லிப் அசைக்காமல் எடுக்கிறார்கள் அது எனக்கு தவறாகப்படுகிறது. லிப் அசைவோடு எடுக்கும் போது தான் ஒரு நடிகனின் நடிப்பும் வெளிவரும்” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →