வைக்கிங் மீடியா ஆண்டு எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரைனா ஜோஷி தயாரிக்க,
தெலுங்கு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொழில் அதிபர் சச்சின் தமிழில் அறிமுகமாக ,
ஈஷா குப்தா, பிரபு , கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில்,
டி.சத்யா என்பவர் எழுதி இயக்கும் படம் யார் இவன்.
சத்யாவின் தாத்தா டி. பிரகாஷ் ராவ் ஏராளமான தெலுங்குப் படங்களை இயக்கியதோடு , உத்தம புத்திரன், படகோட்டி, களத்தூர் கண்ணம்மா போன்ற சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களையும் இயக்கியவர் .
சத்யாவின் அப்பா டி எல் வி பிரசாத்தும் தெலுங்கிலும் இந்தியிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் .
வெண்ணிலா கபடிக் குழு உட்பட மூன்று படங்களை தெலுங்கில் ரீமேக் செய்த இந்த டி.சத்யா , தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்கும் படம் யார் இவன் தமிழில் இது இவருக்கு முதல் படம்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நிறைய திரைப் பிரபலங்கள் !
அருண் விஜய், கே எஸ் ரவிக்குமார், அருண் பாண்டியன் , சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா,
மூன்று முகம் படத்தை இந்தியில் ஜான் ஜானி ஜனார்த்தன் என்ற பெயரில் இயக்கிய டி . ராமராவ் போன்றவர்கள் பாடல்களை வெளியிட ,
நடிகர் பிரபு முன்னோட்டத்தை வெளியிட்டார் .
எல்லோரும் சினிமா பாரம்பரியம் கொண்ட சத்யாவை வாழ்த்தினார்கள் . ஹீரோ சச்சினை வரவேற்றார்கள் . ஹீரோயின் ஈஷா குப்தாவை , கிஷோரை, பிரபுவை , பாராட்டினார்கள்
“தமிழில் நடிப்பது சந்தோஷமாக உள்ளது. கபடி விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது ” என்றார் நாயகன் சச்சின்
படம் பற்றிக் கூறும் இயக்குனர் சத்யா ” இது ஒரு மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் படம் .
கபடி விளையாட்டின் பின்னணியில் படத்தை உருவாக்கி இருக்கிறோம் . ஹீரோ ஒரு கபடி வீரன் . கபடியை ரசிக்கும் கோடீஸ்வரப் பெண் ஒருத்தி அவனை நேசித்து ,
மணந்து கொள்கிறார் . ஒரு நிலையில் அந்தப் பெண் கொல்லப் படுகிறாள். கொலைப் பழி ஹீரோ மீது விழுகிறது .
ஹீரோயின் அப்பாவான கோடீஸ்வரர் குற்றவாளியை தண்டிப்பதில் தீவிரமாக இருக்கிறார் . ஹீரோ என்ன செய்தான் என்பதுதான் கதை . ஹீரோயின் அப்பாவாக பிரபு சார் நடிக்கிறார்
மேலோட்டமாக பார்த்தால் இது வழக்கமான திரில் படம் போல இருக்கும் . ஆனால் அப்படி இல்லாமல் மனோவியல் முறையில் படத்தை கொண்டு போகிறோம் .
இது ஒரு மைன்ட் கேம் படமாக அதாவது மூளை விளையாட்டுப் படமாக இருக்கும் வித்தியாசமான காட்சிகள் . வித்தியாசமான சூழல்கள் ரசிகர்களைக் கவரும் .
படத்தின் எல்லாப் பாடல்களையும் மறைந்த நா . முத்துக் குமார் எழுதி இருக்கிறார் அவர் கடைசியாக பாடல் எழுதிய படம் இதுதான் என்று நினைக்கிறேன் .
இசை தமன் . சூர்யா நடித்த 24 படத்துக்கு படத் தொகுப்பு செய்த புடி பிரவீன் படத் தொகுப்பு செய்கிறார்
தாத்தா மற்றும் அப்பாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியும் எனக்கு இருக்கிறது. ” என்றார் ” எனறார்.