மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரிக்க, விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க,
கதாநாயகியாக திரிஷா நடிக்க, மற்றும் காளிவெங்கட் வினோதினி உடன் நடிக்க,
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் முதல் எய்தவன் வரை பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம்குமார் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் ‘96 ‘
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய திரிஷா , “படத்தின் டீசர் வந்த உடனேயே எதிர்பார்ப்பு அதிகம் ஆயிடுச்சு. நிச்சயமா இது ஒரு வெற்றிப் படமா இருக்கும் .
இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் இது . இந்த சமயத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை எழுதி இருக்கும் இயக்குனர் ஃபிரேமுக்கு நன்றிகள் .
மியூசிக் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கு . விஜய் சேதுபதி பிரம்மாதமா நடிச்சு இருக்கார் ” என்றார் .
விஜய் சேதுபதி தனது பேச்சில், “படத்துக்கு வந்திருக்கும் எதிர்பார்ப்பு பயமா இருக்கு. அது சந்தோஷமா மாறணுமே என்று தோன்றுகிறது .
பொதுவா பத்திரிகையாளர் காட்சியில் பாட்டுக்கு யாரும் கைதட்ட மாட்டீங்க. ஆனா இந்தப் படத்து பாட்டுக்கு நீங்க தட்டினதை பார்க்கும்போது நம்பிக்கை வருது .
ரொம்ப நிம்மதியா ரசிச்சு வேலை பார்த்த படம் இது . திரிஷா கூட நடித்தது ரொம்ப சந்தோசம் ” என்றார்.
“1996 இல் பிளஸ் டூ முடித்த நண்பர்கள் சிலர் வாழ்வில் இப்போ நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை .
எல்லோருக்கும் தொடர்புப் படுத்தப் படுகிற கதையா – பிடிச்ச படமா இது இருக்கும் ” என்றார் இயக்குனர் பிரேம் .
