HERO CINEMAS என்ற நிறுவனத்தின் சார்பில் சி. மணிகண்டன் தயாரிக்க,
நிறம், காந்தர்வன் ஆகிய படங்களில் நடித்த கதிர் ஹீரோவாகவும் ‘கீதாஞ்சலி ‘என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்த ஸ்வப்னா மேனன் கதாநாயகியாகவு
லிவிங்க்ஸ்டன், சரவணா சுப்பையா, அவன் இவன் ராம்ராஜ் , இயக்குனர் ஜெகன், கிரேன் மனோகர் ஆகியோர் உடன் நடிக்க
கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் இருவரிடமும் பல படங்களில் பணியாற்றியவரும் . நிறைய தெலுங்குப் படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியவருமான விஜய் சண்முகவேல் அய்யனார்.,
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் ‘ ஒன்பதிலிருந்து பத்து வரை .
அது என்ன 9லிருந்து 10வரை?
கால் டாக்சி ஒட்டுனரான ஹீரோ, ரேடியோ ஜாக்கியான ஹீரோயினை, சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வரை காரில் அழைத்துச் செல்கிறான்.
அவன் கொஞ்சம் விநோதமான செய்கைகளைச் செய்யும் நபராக இருந்தாலும் அவசரமாக போக வேண்டியிருப்பதால் சகித்துக் கொள்கிறார் வழியிலேயே இருவருக்கும் முட்டிக் கொள்கிறது.
‘பிடிக்கலன்னா இறங்கி பொடிடி நடையா போ’ என்று நடுவழியில் அவன் சொல்ல, வேறு வழியில்லாமல் அவள் கூடவே பயணிக்கிறாள் .
பிறகு ஹீரோ தன்னுடைய ஃபேன் (Fan) என தெரிந்துகொண்ட ஹீரோயின் அன்பாக பேச, அதை ஹீரோ தவறுதலாக புரிந்து கொள்கிறான்.
இந்த கட்டத்தில் ஒரு பெரிய அதிர்ச்சியையும் ஹீரோயினுக்கு ஏற்படுத்துகிறான்.
ஹீரோவின் இந்த செயல்பாடுகளுக்கு இடையில், சிட்டி போலிஸ் கமிஷ்னர் ஒரு சீரியல் கொலை விஷயமாக. ஹீரோவை தேடுகிறார்.
நெடுஞ்சாலையில் ஒரே காரில் இருவரையும் கண்ட போலீஸ் இவர்களைத் துரத்துகிறது.
அவர்களிடத்தில் இருந்து தப்பித்து காஞ்சிபுரம் போய்ச் சேர்ந்தால் அங்கே ஹீரோயின் ஹீரோவுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கிறாள்.
இதற்கடுத்து ஹீரோவும் ஹீரோயினுக்கு ஷாக் கொடுக்கும்வகையில் ஒரு செயலைச் செய்ய.. இருவருக்குள்ளும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
அதன் பிறகு ஹீரோ உயிருக்கு ஆபத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஹீரோயினும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள்.
இப்படி போகும் கதை கடைசி நிமிடத்தில் முற்றிலும் தலைகீழாக தோசையை திருப்பிப் போடுவது போல மாறும்
இப்படி ஏகப்பட்ட அழகான சிக்கல்களும், அதிர்ச்சிகளும் கலந்து சொல்லும் கதை “ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10)“.
இப்படத்தின் முடிவு நம்மை சிந்திக்க வைத்து பிரம்மிப்பில் ஆழ்த்தும். அந்த முடிவில் இருந்து ஒரு கதை துவங்கும்.
லவ், திரில்லர், காமெடி கலந்த ஒரு கவிதையாக இருக்கும் ” என்று படத்தின் கதையை சொல்லும் விஜய் சண்முகவேல் அய்யனார்,
தொடர்ந்து “கதாபாத்திரங்களுக்கு வரும் பிரச்னைகளுக்கான காரணங்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் போது,
ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எதிர்பாராத சுவாரஸ்யமான திருப்பங்களும் அதிரடிகளும், நகைசுவையுமாக கலந்து 20/20 மேட்ச் பார்ப்பதுபோல இருக்கும்.
உச்சக்கட்ட காட்சியில் அதிரடியான கதை திருப்பமும், ஹீரோயின் மீதான காதல் விஷயத்தில் ஹீரோ எடுக்கும் முடிவில் ஒரு புதுமையும், கவித்துவமும் கலந்திருக்கும்…” என்கிறார் .
படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம் . பல பற்றிப் படங்களுக்கு பணியாற்றிய இவர் இப்போது , கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப் நடிக்கும்,
முடிஞ்சா இவன புடி படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து கொண்டு இருக்கிறார்
ராஜ ரத்தினம் பற்றிக் குறிப்பிடும் இயக்குனர் , “படத்தின் ஒரு அங்கமாக, ஹைவே ரோட்டின் ஓரம் மரத்தில் ஒருவர் தூக்குப் போட்டுத் தொங்கும் காட்சியை எடுக்க வேண்டி இருந்தது.
எடுக்க ஆரம்பிக்கும்போது ஏதோ உணமையான தற்கொலை என்று எண்ணி பெரும் கூட்டம் கூடி விட்டது . படத்தில் நடிக்கும் போலீஸ் தவிர நிஜ போலீசும் வந்து ஒரே களேபரம்.
அந்த சூழ்நிலையிலும் அசராமல் அந்தக் காட்சியை அவ்வளவு கும்பலில் பிரம்மாதமாக எடுத்துக் கொடுத்தார் ராஜரத்தினம் . அவரைத் தவிர யாராலும் முடியாத விஷயம் அது .” என்கிறார் இயக்குனர் .
“படம் முழுக்க பயணம் தொடர்பான கதை என்பதால் அதற்கேற்ப கேமரா நகர்வுகளை கொடுத்து இருக்கிறேன் .
நிற்கிற காட்சிகளில் கூட கேமரா ஒரு சின்ன மூவ் மென்டில் இருக்கும் ” என்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம்
” நான் மும்பையில் பிறந்த மலையாளப் பொண்ணு . ஆனா சின்ன வயசில் இருந்தே நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன் . தமிழ் படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் . அதனால எனக்கு தமிழ் நல்லா பேச வரும் .
இயல்பாவே நான் வாயடி . இந்தப் படத்துல ரேடியோ ஜாக்கியா வர கேரக்டர் . அதனால நான் பேச ஆரம்பிச்ச உடனே என்னை ஹீரோயினா டைரக்டர் முடிவு பண்ணிட்டார் ” என்கிறார் கதாநாயகி ஸ்வப்னா மேனன்
மிக இயல்பாக பேசும் ஹீரோ கதிர் ” நிறம் எனக்கு முதல் படம் . அப்புறம் கந்தர்வன் . ஒரு வெற்றிப் படத்துக்காக காத்து இருந்த போதுதான் இந்த கதையை இயக்குனர் சண்முகவேல் சொன்னார் .
கதை ரொம்ப பிடித்து இருந்தது
படம் என் பொறுப்பில்தான் தயாராகிறது . எடுத்து முடிச்சுட்டோம் . எல்லோருமே நல்லா பண்ணி இருக்கோம் .
படத்துல தமிழ்ச்செல்வி ஒரு நல்ல கேரக்டர் பண்ணி இருக்காங்க . பிரிட்ஜ்ல வச்ச சாப்பாட்டையே எப்பவும் கொடுக்கறதால,
அந்த கேரக்டரோட கணவர் வீட்டை விட்டே ஓடிப் போய்டுவாரு . அந்த கேரக்டர் செம காமெடியா இருக்கும்
படம் ரொம்ப நல்லா வந்திருக்கு . பாத்தவங்க எல்லாரும் பாரட்டுறாங்க. படத்தை நாங்களே ரிலீஸ் பண்றோம்
டைரக்டர் சொன்ன நாளை விட மட்டுமல்லாது சொன்ன பட்ஜெட்டை விட கம்மியாகவும் எடுத்துக் கொடுத்தார் .
நாங்க ஒரு நல்ல படம் பண்ணி இருக்கோம் . எல்லோருக்கும் இது புடிக்கும் படமா இருக்கும் அடுத்த படமும் இந்த டைரக்டர் கூடவே பண்ணலாம் என்ற அளவுக்கு சந்தோஷமா இருக்கேன் ” என்றார்
ஜூலை ஒன்றாம் தேதி படம் வெளியாகிறது .
வாழ்த்துகள் !