உண்டர்பார் பிலிம்ஸ், கலர் எல்லோ புரடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் இணைந்து தயாரிக்க,
அமலா பால் , சமுத்திரக் கனி, செல்வி யுவா, ரேவதி ஆகியோர் நடிக்க , அஸ்வினி திவாரி இயக்கி இருக்கும் படம் ‘அம்மா கணக்கு’. விமர்சனக் கணக்கு என்ன என்று பார்ப்போம்
கல்யாணம் ஆகி சில மாதங்களே ஆகியிருந்த நிலையில் கணவன் இறந்து போக, தனிமரமான கர்ப்பிணிப் பெண் சாந்தி (அமலா பால்) , தன் பிள்ளைக்காகவே வாழ்வை அர்ப்பணிக்கிறாள் .
ஒரு டாக்டர் (ரேவதி) வீடு , ஈர மாவுக் கடை , மீன் மார்க்கெட் என்று பல்வேறு இடங்களில் தினமும் கஷ்டப்பட்டு உழைக்கும் சாந்தியின் லட்சியமே ,
தனது பிள்ளையை பெரிய டாக்டராகவோ கலெக்டராகவோ ஆக்க வேண்டும் என்பதுதான்
வளர்ந்து பத்தாவது படிக்கும் அந்த பிள்ளை அபிநயாவுக்கு (யுவஸ்ரீ ) படிப்பில் பெரிய நாட்டம் இல்லை . கணக்கு வரவே இல்லை .
பத்தாவது முடித்த பின் அம்மா போல வேலைக்காரியாகப் போய் விட வேண்டும் என்பதுதான் அவளது எண்ணம் .
‘என்னை பெரிய படிப்பு படிக்க வைக்க உன்னிடம் காசு இருக்கா ?” என்ற கேள்வி, அந்த மாணவிக்கு ஒரு சாக்கு .
தன் மீது அன்பாக இருக்கும் டாக்டரின் ஆலோசனைப்படி, பத்தாவது படிக்க மீண்டும் பள்ளியில் சேர்ந்து, மகள் படிக்கும் வகுப்பிலேயே படித்து, மகளுக்கு படிப்பு மீது ஆர்வத்தை ஏற்படுத்த முடிவு செய்கிறாள் சாந்தி .
டாக்டரின் சிபாரிசு காரணமாக சாந்தியை அபிநயாவின் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறார் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் (சமுத்திரக்கனி )
காலாண்டுத் தேர்வில் மகளை விட அதிக மதிப்பெண் எடுக்கிறாள் சாந்தி .
”அரையாண்டுத் தேர்வில் உன்னை விட அதிக மதிப்பெண் எடுத்தால் நீ பள்ளி வருவதையே நிறுத்தி விட வேண்டும் ‘ என்று மகள் சொல்ல, அந்த சவாலை ஏற்கிறாள் சாந்தி .
அபிநயா படித்து அரையாண்டுத் தேர்வில் சாந்தியை விட மதிப்பெண் எடுக்கிறாள் .
சாந்தி பள்ளிக்குப் போவதை நிறுத்த , மீண்டும் படிப்பைப் புறக்கணிக்கும் அபிநயா , அம்மா போல வேலைக்காரி ஆகும் பழைய முடிவுக்கே வருகிறாள் .
வேறு வழியின்றி மீண்டும் பள்ளிக்குப் படிக்க வருகிறாள் சாந்தி . கொந்தளிக்கும் அபிநயாவுக்கு அம்மாவின் நடத்தை மீதே சந்தேகம் வருகிறது .
அதன் காரணமாக அம்மா கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை திருடிக் கொண்டு போய், தோழிகளுடன் சேர்ந்து ஒரே நாளில் விலை உயர்ந்த உணவு , ஆடம்பர உடை என்று செலவு செய்து தீர்க்கிறாள் அபிநயா
விஷயம் அறிந்து சாந்தி அதிர, அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த அம்மா கணக்கு .
தமிழில் இயக்கி இருக்கும் இதே அஸ்வினி திவாரி இயக்கத்தில் இதே கேவ் மிக் யு ஆரியின் ஒளிப்பதிவில்,
ஸ்வரா பாஸ்கர், ரியா சுக்லா, ரத்னா பதக், பங்கஜ் திரிபாதி நடித்து வெளியான ,











