அடங்க மறு @ விமர்சனம்

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா,  அழகம்பெருமாள், சம்பத் ராஜ், முனீஸ்காந்த் நடிப்பில்

கார்த்திக் தங்கவேல் எழுதி இயக்கி இருக்கும் படம் அடங்க மறு . ரசிக்க மறு என்று ரசிகர்கள் சொல்லாத மாதிரி இருக்குமா ?

அநியாயத்துக்கு துணை போகும் உயர் போலீஸ் அதிகாரிகள் ஜாயின்ட் கமிஷனர் சாரங்கன் (சம்பத் ராஜ்) இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் ( மைம் கோபி), 
 
வேறு வழியின்றி அவர்கள் சொல்வதை கேட்கும் போலீஸ் அதிகாரிகாளான சீனியர் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் (அழகம்பெருமாள்) , 
 
ஹெட் கான்ஸ்டபிள் ராமதாஸ் ( முனீஸ் காந்த்) இவர்களுக்கு மத்தியில் நேர்மையும் கம்பீரமுமாக செயல்படும் இளம் அதிகாரி சுபாஷ் ( ஜெயம் ரவி). 
 
இரவு நேர ரோந்துப் பணியில் சாதாரண பொது மக்களை சோதனை செய்வது போலவே ,
 
மந்திரி மகன் காரையும் சோதனை செய்ய சுபாஷ் முயல , மந்திரி மகன் எகிற, மந்திரி மகனிடம் மன்னிப்பு கேட்குமாறு சந்திரன் அறிவுறுத்த , 
 
சுபாஷோ செல் போனில் உள்ள தொழில் நுட்பம மூலம் அவனை பின் தொடர்ந்து அவன் குடிக்கும் பாரில் உள்ள
 
கண்காணிப்புக் கேமராக்களை செயல் இழக்க செய்து , யார் என்றே தெரியாமல் மந்திரி மகனை நையப்புடைக்கிறான் . 
 
அதே வழியில் பிசினஸ் மேன் பிரான்சிஸ் (மாத்யூ வர்கீஸ்), சாப்ட் வேர் கம்பெனி ஓனர் ரவிச்சந்திரன் ( நிதின் மேத்தா), கலெக்டர் ஞான சேகரன் (கஜராஜ்),
 
டி வி சேனல் அதிபர் சஞ்சய் (பாபு ஆண்டனி) ஆகியோரின் மகன்களான  அபிஜித்     ( பரத்வாஜ்), புவன் (ஷபீர் ), தீபக் (விஜய் விக்டர்) கிறிஸ்டி (ராஜா) ஆகியோர்
 
ஒன்று சேர்ந்து பல பெண்களை கூட்டுக் கற்பழிப்பு செய்து கொடூரமாக கொலையும் செய்வதை கண்டு பிடிக்கிறான் . 
 
ஆனால் போலீஸ் அதிகாரிகள் அதற்காக அவனை கண்டிக்கின்றனர் . 
 
தவிர மன்னிப்பு கேட்கவும் சொல்கின்றனர் . 
 
போன இடத்தில் அவர்கள் மிகவும் கேவலமாக பேச , அவர்களை அடித்து உதைத்து கைது செய்து காவல் நிலையத்தில் வைக்கிறான் . 
 
அடுத்த சில நிமிடங்களில் அந்த பெரிய மனிதர்கள் உயர் போலீஸ் அதிகாரிகளை வைத்து பிள்ளைகளை மீட்கின்றனர் . சுபாஷ் சஸ்பென்ட் செய்யப்படுகிறான் . 
 
அதே நேரம் அவனது அப்பா ( பொன் வண்ணன்) அம்மா    (ஸ்ரீ ரஞ்சனி)          அண்ணன் ( சுப்பு பஞ்சு) அண்ணி (மீரா வாசுதேவன்)அண்ணனின் இரட்டை பெண் குழந்தைகளில் ஒன்று ஆகியோர் எரித்துக் கொல்லப் படுகின்றனர் . 
 
இன்னொரு குழந்தையை விட்டு வைக்க காரணம் , அது வளர்ந்த பின்பு  நாங்கள் கூட்டுக் கற்பழிப்பு செய்யவே என்று கொலைகார்கள் குமுற,
 
நான்கு பேரையும் அவர்களது தந்தையின் கையாலேயே கொல்ல வைப்பேன் என்று சபதம் எடுக்கும் சுபாஷால் , 
 
அதை செய்ய முடிந்ததா என்பதே இந்த அடங்க மறு . 
 
சுபாஷ் கேரக்டரில் நேர்மை, கோபம் , திட்ட வட்டம் , தீர்மானம் , நிதனமான் ஆனால்
 
அதிரடியான செயல்பாடுகள் என்று அட்டகாசமாக நடித்திருக்கிறார் ஜெயம் ரவி . 
 
மகன்கள் சாகையில் அப்பாக்கள் துடிக்கும் போது,  தன் இழப்பின் சோகத்தையும், அநியாயத்துக்கு எதிரான கோபத்தையும்
 
ஒரே சேர வெளிப்படுத்தி அமைதியாக கொந்தளிக்கும் முகபாவனைகள் அபாரம் . வெல்டன் ரவி !
 
அழகம்பெருமாள் இயல்பு . 
 
மற்ற எல்லோரும் ஜஸ்ட் ஒகே . நாயகி ராஷி கண்ணாவுக்கு இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் ராசி 
 
ஒபே தி ஆர்டர் (obey the order) என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டு அராஜக மேலதிகாரிகள் தமக்குக் கீழ் உள்ள அதிகாரிகளை 
 
அநியாயத்துக்கு துணை போகச் செய்வதையும் . அதை செய்யவும் முடியாமல் செய்யாமல் இருக்கவும்  முடியாமல்
 
மன சாட்சி உள்ள கீழ்  அதிகாரிகள் புழுங்குவதையும் சிறப்பாக பதிவு செய்கிறார் இயக்குனர் . 
 
பையனை காக்க துடிக்கும் தந்தைகளே தங்கள் கையால் தங்கள் மகனை கொல்ல வைக்கும் உத்தி சிறப்பு .   
 

பெரிய இடத்துப் பிள்ளைகளின் தவறுகளை தடுக்கப் போகும்போது எல்லாம் ” என்னையே  எதிர்க்கறியா? என் அப்பா யாரு தெரியுமா? ” என்று

 
அவர்கள் வழக்கமாக எகிறுவதை கிண்டல் செய்யும் விதமாக ” ஏன் உன் அப்பா யாருன்னு உனக்கு தெரியாதா?
 
ஏண்டா இந்த பணக்காரப் பசங்களுக்கு எல்லாம் அப்பன் யாருனே தெரியாதா ?”‘  என்று ஜெயம் ரவி பேசும்  வசனம்  ஃபிரஷ் ஷான ஏகடியம் . வசனம் விஜி .அருமை 
 
சொல்லப்படும் திரைக்கதைக்கு சாம் சி எஸ் பின்னணி இசை உணர்வுக் கூட்டல் செய்கிறது 
 
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில் கதை சூழலுக்கும் உணர்வுக்கும் உரிய ஸ்மார்ட்னஸ் . 
ரூபனின் படத் தொகுப்பு உச்ச பட்ச நேர்த்தி 
 
செல்போன் , கம்பியூட்டர், ஹேக்கிங் என்று பல படங்களில் பார்த்த காட்சிகளே  வேறு உத்திகளில் சுபாஷ்  பழி வாங்க உதவுகிறது . 
 
எனினும் ஒரு கொலையாளியை சுற்றி விஷ வாயுவை பரப்பி , அதை வீடியோவாக்கி, வீடியோ கேம் ஆக்கி மக்களுக்கு செல் போன் மூலம்  அனுப்பி ,
 
அவன் யாரென்று சொல்லி , இப்படி பல பெண்களை கற்பழித்து கொன்ற அயோக்கியன்
 
சாக வேண்டுமானால் வீடியோ கேம் ஆடுங்கள் என்று சொல்லி மக்களும் ஆடுவது சிறந்த ஐடியா . ஆனால் அவனை மக்களே கொள்வது போல செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .
 
ஆனால் ஒரு காட்சியில் ஜெயம் ரவியே புலம்புவது போல அப்பாக்கள் கையால் கொல்ல வேண்டும் என்ற மங்கப்பா சபதம் காரணமாக அது முடியாமல் போகிறது
 
ஆனால் முக்கியமாக கிளை மாக்சில் கடைசிக் கொலை உத்தியில் அநியாயமாக சறுக்குகிறார் இயக்குனர் .
 
சட்டென்று அந்தக் கயிற்றை இழுத்து பக்கத்து தூணில் கட்டி விட முடியதா பாபு ஆண்டனியால் ? 
சரியாக சொல்லப் போனால் முதல் கொலைதான்   ஹீரோவின் சபதத்துக்கு நேர்மையாக அப்பாவின் கையால் நடக்கிறது . 
 
படம் என்று பார்த்தால் நான் சிகப்பு மனிதனில் ரஜினி காந்த் துப்பாக்கியை வைத்து செய்த வேலைகளை
 
இந்த படத்தில் ஜெயம் ரவி செல்போன் , கணிப்பொறி , ரசாயனங்கள் மூலம் செய்கிறார் . அவ்வளவுதான் . 
 
இன்னும் நல்ல கதை அல்லது திரைக்கதைக்கு முயன்று இருக்கலாம் . 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *