“தம்பி ராமையா மகன் ஹிருத்திக் ரோஷன் போல!” — சிவ கார்த்திகேயன்

adha 5
சில்வர் ஸ்க்ரின் ஸ்டுடியோஸ்  நிறுவனத்தின் சார்பாக சிவ ரமேஷ்குமார் தயாரிக்க,  இயக்குனர் மற்றும் பிரபல குணச்சித்திர நடிகரான  தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’

இப்படத்தின் மூலம்  தெலுங்கில் வளர்ந்து வரும் கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் தமிழில் அறிமுகமாகிறார். 

நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் கருணாகரன் படம் முழுக்க வருகிறார். பாண்டிராஜன், ஆடுகளம் நரேன், மனோபாலா, யோக்ஜேபி ஆகியோர் முக்கியக்  கதாபாத்திரங்களில்  நடித்திருக்கிறார்கள்.

இசை டி இமான் , பாடல்கள் யுகபாரதி .

அட்டகத்தி மற்றும் குக்கூ படங்களின் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.மதன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

விஜய் டிவி யில் பல நிகழ்சசிகளை இயக்கிய ரா. இன்ப சேகர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்
‘ஒரு சாதாரண கிடார் இசை கலைஞனின்  வாழ்க்கையில் நடைபெறும் ஒரு வித்தியாசமான சம்பவமும் அது தொடர்பான பல திருப்பங்களும் நிறைந்த, 
உமாபதி, பிரபு சாலமன், தம்பி ராமையா
உமாபதி, பிரபு சாலமன், தம்பி ராமையா

நகைச்சுவை கலந்த பயணமே,  இந்த அதாகப்பட்டது மகாஜனங்களே. இது ஒரு கற்பனைக்  கதை என்றாலும் நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும்  என்றோ ஒரு நாள் நம் வாழ்க்கையில் கடந்து வந்த, 

ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் அடிப்படையிலேயே இந்த திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே கதாநாயகனின் வாழ்க்கையோடு, 
நம்மை நிச்சயமாக பொருத்திப்  பார்த்து கொள்ள முடியும்.’ என்பது,  படத்துக்காக இயக்குனர் கொடுக்கும் அறிமுகம்

இந்தத் திரைப்படத்தின்  பாடல் மற்றும் டிரெய்லர்  வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனும்  கே எஸ் ரவிக்குமாரும் , பிரபு சாலமனும் பாடல்களை வெளியிட ,

எஸ் வி சேகர் , ஏ எல் விஜய், இயக்குனர் அறிவழகன், பேரரசு, பொன்வண்ணன் , துரை  செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர் .
நிகழ்சசியில் திரையிடப்பட்ட முன்னோட்டம்  நன்றாக இருந்தது . டபுள் ஓகே பாடல் வரிகள் சிறப்பு, உமாபதி  நன்றாக நடனம் ஆடுகிறார் .
முதல் படம் என்ற வகையில் நடிப்பும் பாராட்டும்படி இருக்கிறது . தோற்றம் உயரம் இருக்கிறது .

adha 6

நிகழ்சசியில் பேசிய ஏ எல் விஜய் ” நமக்கு எல்லாம் கிடைத்த பொக்கிஷம் தம்பி ராமையா அண்ணன் . அவர் மகன்  ஜெயிக்க வேண்டும் நிறைய சாதிக்க வேண்டும் ”  என்றார் .

”தம்பி ராமையா சினிமாவில் பல கஷ்டங்களை  சந்தித்து போராடி வென்றவர் . அது சாதாரண விஷயம் இல்லை  அதை உமாபதியும் மனதில் வைத்துக் கொண்டால் வெற்றி உறுதி .

மற்றபடி அவர் நடிப்பு நடனம் எல்லாமே நன்றாக இருப்பதால் அவருக்கு வெற்றி உறுதி ” என்றார் எஸ் வி சேகர்

மைனா படம் மூலம் தம்பி ராமையாவின் திரையுலக வாழ்வில் ஏற்றம் தந்த பிரபு சாலமன் பேசும் போது ” தம்பி ராமையா தன்  உழைப்பால் , திறமையால் காத்திருந்து உயர்ந்தவர் .

இன்று அந்த  வாய்ப்பு அவர் மகன்  உமாபதிக்கு இளம் வயதிலேயே கிடைத்து இருப்பது சந்தோஷமான விஷயம் . உமாபதிக்கு நல்ல நடிப்புத் திறமை இருக்கிறது . முக வெட்டும் தோற்றமும் உள்ளது .

நிசசயமாக விரைவில் அவரை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை சரியான கதை அமைந்த உடன் இயக்குவேன் ” என்றார்

“தம்பி ராமையாவைப் போல அவர் மகன் உமாபதியும் முன்னேறுவர் என்பது இந்தப் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது தெரிகிறது .

adha 2
தம்பி ராமைய்யாவுக்கு  நல்ல  களம்  அமைத்துக் கொடுத்த பிரபு சாலமன்  உமாபதியை வைத்தும் படம் இயக்குவேன் என்று சொல்வதில் இருந்தே அது உறுதியாகிறது ” என்றார் பொன்வண்ணன் .

“காமெடி , செண்டிமெண்ட், வில்லத்தனம் என்று எல்லா கேரக்டர்களிலும் அசத்தக் கூடிய நடிகர் தம்பி ராமையா . அவரது மகன் உமாபதியிடமும்

அந்த திறமைகள் இருப்பதைப்  பார்க்க முடிகிறது. இவருக்கும் சினிமாவில் நல்ல இடம் இருக்கிறது ” என்கிறார் இயக்குனர் அறிவழகன் .

இயக்குனர் பேரரசு தன்  பேச்சில் ” தம்பி ராமையா மிக அற்புதமான கலைஞன் . அவரது திறமை அவர் மகனுக்கும் இருக்கும் என்பதை இந்தப் படத்தின் காட்சிகள் நிரூபிக்கின்றன ” என்றார் .

கே எஸ் ரவிக்குமார் தன்  பேச்சில் ” தம்பி ராமையா மிக அற்புதமான நடிகர் . அவருடைய எனர்ஜி லெவல் எப்பவுமே சிறப்பா இருக்கும் .

உமாபதியிடம் நடிப்பு , நடனம் எல்லா திறமைகளும் இருக்கு . அப்பாவை விட முன்னேறணும் .” என்றார் .

adha 3

உமாபதி   பேசும்போது ” இங்கே பல பெரிய சாதனையாளர்கள் என்னை வாழ்த்த வந்திருப்பது சந்தோஷமாக உள்ளது . சின்ன வயசில் கே எஸ் ரவிக்குமார்  சார் படங்களில் வந்து ஆடுவது எனக்கு பிடிக்கும் .

ஜஸ்ட் ஒரு சீனில் வந்து அழகாக ஆடி விட்டுப் போவார் . சொன்னா நம்ப மாட்டீங்க . எனக்கு நடனத்தில் ஆர்வம் வரக்  காரணமே அவர்தான் .

அதே போல எப்படி அலட்டிக்காம அழகா ஆடணும் என்பதை சிவ  கார்த்திகேயன் அண்ணனிடம் பார்க்கலாம் . வருத்தப் படாத வாலிபர் சங்கம் பாட்டில் அழகாக தலையை அசைத்தே கவர்ந்து விடுவார் .

பிரபு சாலமன் சாரின் வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி . அப்பாவின் அருமையை நான் அறிவேன் . அவர் பெயரையும் புகழையும் காப்பாற்றி இன்னும் நல்ல பேர் எடுப்பேன் ” என்கிறார் .

படத்தின் இயக்குனர்  ர.இன்பசேகர் “ஆரம்பத்தில் விஜய் டிவியில் நான் இயக்கிய பல நிகழ்சசிகளில் சிவ  கார்த்திகேயன் பங்களிப்பு செய்துள்ளார் .

அப்போது என்னிடம் காட்டிய அதே அன்பை இப்போதும் காட்டுவது நெகிழ்வாக உள்ளது .

இந்தப் படத்துக்கு நான் ஹீரோ தேடியபோது உமாபதி வந்தார் .  தேர்வில் கலந்து கொண்டார் . அவரை  நாங்கள் தேர்ந்தெடுத்தோம் .

adha 1
அப்புறம்தான் அவர்  தம்பிராமையா சாரின் மகன் என்றே சொன்னார் . அந்த தன்னம்பிக்கை அபாரமானது ” என்றார் .

தம்பி ராமையா தன்  பேச்சில் “என் மீது கொண்ட அன்பு  காரணமாக என் மகனை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி . என் பெயரை பயன்படுத்தாமல் என் மகன் வெல்வதே  எனக்குப் பெருமை .

அவன் அப்பா நான் என்று சொல்லி என்னை அறிமுகம் செய்து கொள்ளும் அளவுக்கு அவன் உயரவேண்டும் .

இங்கே என் தங்கம் சிவ கார்த்திகேயனைப் பற்றி சொல்ல வேண்டும் . அவரது அப்பா தாஸ் மிகச் சிறந்த மனிதர் . திருச்சியில் சிறைத் துறையில் பணியாற்றிய மிக நேர்மையான மனிதர் .

அப்படி ஒரு சிறந்த தகப்பனை பதினேழு வயதில் இழப்பது எவ்வளவு கொடுமை . அந்தக்  கொடுமையை அனுபவித்து சுயம்புவாக இருந்து உழைத்து முன்னேறியவர தம்பி  சிவகார்த்திகேயன் .

அவர் இன்னும் உயரங்களுக்குப்  போவார். போகணும் ” என்றார் .

சிறப்பாக சிறப்புரை ஆற்றிய சிவ கார்த்திகேயன் ” தமபி ராமையா அண்ணன்  போல் ஓர் உற்சாகமான நபரை நான் பார்த்ததே இல்லை . அவர் இருந்தால் அவர் பேச எல்லோரும் கேட்டுக் கொண்டு இருப்போம் .

adha 7
உமாபதி என் தம்பி போல . அவர் நன்றாக நடனம் ஆடுகிறார் . சண்டை போடுகிறார் . நடிப்பு நன்றாக இருக்கிறது . அவர் உயரத்துக்கும் தோற்றத்துக்கும் திறமைக்கும், 
அவர் ஒரு புதிய ஹிருத்திக் ரோஷன் போல வருவார் என்று தோன்றுகிறது.

என் அப்பா நல்லவர் என்று நான்  சொல்வதை விட மற்றவர் சொல்லிக் கேட்பதே பெருமை . ஒரு முறை நக்கீரன் கோபால் சார்,

அப்பா பற்றி மனதார பாராட்டியபோது அவ்வளவு பெருமையாக இருந்தது . அடுத்து என் அப்பா பற்றி பேசும் சினிமா நபர் தம்பி ராமையா அண்ணன் தான் .

இன்னிக்கு என் அப்பா என் கூட இருந்தா எவ்ளோ நல்லா வச்சு பாத்துக்குவோம்னு தோணும் . ஆனா எனக்கு அது அமையல .

உமாபதி….. நீங்க எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் உங்க அப்பாவான தம்பி ராமையா அண்ணனை நல்லா பாத்துக்கணும் ” என்றார் .

அதாகப் பட்டது மகா ஜனங்களே ! தாய் தந்தைப் பாசம் தலையாயது !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *