அரியர்ஸ் மாணவர்களுக்கு அர்ப்பணமாகும் ‘அதிமேதாவிகள்’

adhi 3
அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்கம் தயாரிக்க, சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் நடிக்க,

உடன் , தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது (கோலி சோடா) மற்றும் மாரி படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்க,

அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும்   திரைப்படம் ‘அதி மேதாவிகள்’ நட்பையும்  நகைச்சுவையையும்  மையமாக கொண்டு  உருவாகும் படம் இது என்கிறது படக் குழு

“நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும்  பேராதரவாக இருந்த ,
adhi 2
எங்கள் அதி மேதாவிகள் படத்தின் தயாரிப்பாளர் மால்காம் அவர்களுக்கு, எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
எல்லா அரியர்ஸ் மாணவர்களுக்கும் எங்களின் அதி மேதாவிகள் திரைப்படத்தை அர்ப்பணிக்கிறோம் ” என்று உற்சாகமாக கூறுகிறார் கதாநாயகன் சுரேஷ் ரவி. 
“பெற்றோர்களின் வற்புறுத்தலால்  இரண்டு மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, படிக்க முடியாமல்  அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைக்கின்றனர்.
அதை சரி செய்வதற்கு அவர்கள் என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பது தான் எங்கள் ‘அதி மேதாவிகள்’ படத்தின் கதை.
விரைவில் எங்கள் படத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்து இருக்கின்றோம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன்.

adhi 1

“என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் படம் எடுக்க்கப்பட்டு இருந்தாலும் இது எல்லா தொழிற்படிப்புகளுக்கும் பொருந்தும் .
அரியர்ஸ் வைக்கும் மாணவர்கள் பலரும் ஒரு நிலையில் முக்கியமான தவறை செய்கிறார்கள் . அது கூடாது என்ற மெசேஜும் படத்தில் இருக்கிறது .
அது என்ன தப்பு என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்” என்கிறார் தயாரிப்பாளர் மால்கம் ⁠⁠⁠⁠

படத்தின் முன்னோட்டத்தில் நகைச்சுவை சுவை இருக்கிறது .
அரியர்ஸ் இல்லாத வசூல் கிடைக்கட்டும் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *