நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல @ விமர்சனம்

naalu 2

ஆல்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திகேயன், ஷாரியா , இவான் ஸ்ரீ , ஜெகதீஷ், ஜார்ஜ் விஜய், அரவிந்த் , அருள்ஜோதி நடிப்பில்

பிரபல கதை வசன கர்த்தா செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜ் இயக்கி இருக்கும் படம் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல.

படத்தில் ஒரு காட்சியில் கூட ஒரு பெண் கூட இல்லாமல் முழுக்க முழுக்க ஆண்களே நடித்துள்ள படம் இது .  படம் பார்க்கப் போவது தப்பா இல்லையா ? பேசுவோம்

பணியில் இருக்கும் வரை நேர்மையாக இருந்து பின்னர் எளிய வாழ்க்கை வாழும் ஒரு போலீஸ் அதிகாரியின் (அருள்ஜோதி) பெரிய மகன் இறந்து விட ,

naalu 5

அவரது இளைய மகனுக்கு அண்ணனின் நண்பர்களோடு தொடர்பு ஏற்படுகிறது .

அணில் என்பவன் (ஆபீஸ் சீரியல் நாயகன் கார்த்திக்) உட்பட்ட அந்த மூன்று நண்பர்களின்  நோக்கம் கொள்ளையடித்து பணக்காரர்கள் ஆவது.

தன் தந்தையின் இப்போதைய நிலைமை காரணமாக நேர்மையாக இருப்பதில் பலன் இல்லை என்று எண்ணும் அந்த இளைய மகனும் மூவரோடு சேர்கிறான்.

நான்கு பெரும் சேர்ந்து ஓரிடத்தில் அஞ்சு லட்ச ரூபாயைக் கொள்ளை அடிக்க, ஒரு நிலையில் போலீஸ்காரர் மகன் அதை கொண்டு வரும்போது அவன் அதை இழந்து விடுகிறான் .

naalu 4

அணில் உள்ளிட்ட மூவரும் பணத்தை இவனே திருடி விட்டு பொய் சொல்வதாக குற்றம சாட்டி அடித்து உதைத்து ‘ஒரு வாரத்தில் பணம் வேண்டும்

இல்லாவிட்டால் ஒய்வு பெற்ற அந்த போலீஸ் அதிகாரியை கொன்று விடுவோம் என்று மிரட்டுகின்றனர் .

இந்த நிலையில் முன்பொருமுறை ஒரு கோடீஸ்வரரை அந்த போலீஸ் அதிகாரி காப்பாற்ற , அதற்கு நன்றியாக அந்த கோடீஸ்வரர் ஒரு பிளாங்க் செக் கொடுத்து இருக்க,

கடமையை காசாக்க விரும்பாமல் போலீஸ் அத்காரி அதை பயன்படுத்தாமல் வைத்து இருக்க,

அப்பாவுக்கு தெரியாமல் அதைக் கொண்டு போய் அணிலிடம் கொடுத்து அஞ்சு லட்ச ரூபாய் எடுத்துக்கொள்ளச் செய்ய மகன் முடிவு செய்கிறான் .

naalu 3

காசோலையைக் கொண்டு போய் அணிலிடம் கொடுக்க, அவன் அதில் ஐந்து கோடி ரூபாய் நிரப்பி எடுக்க திட்டமிடுகிறான் .

அதன்படி போலி போலீஸ் அதிகாரி , போலி நிறுவனம் தயார் செய்து பணத்தை எடுக்க அவர்கள் முயல, விளைவு என்ன ஆனது என்பதே இந்தப் படம்
 .
படத்தில் ஒரு பெண் கூட இல்லை என்பது குறையாகவே தெரியவில்லை . அது படத்தின் பிளஸ் . அதுதான் படத்தின் பிளஸ்

ஷாட் மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் .

ஆனால் ஒரு நிலையில் எதற்கெடுத்தாலும் ஹை ஸ்பீடு , ஸ்டெப் ஃபிரீஸ் ஷாட்கள் என்று போடுவது வேகத்தை குறைக்கிறது .

naalu 1

தப்பு செய்வதை நியாயப் படுத்த வசனங்களை காட்சிகளை தேடி தேடி பிடித்து இருப்பது விபரீதம். செக் மோசடிக்கு ஐடியா கொடுப்பது போன்ற காட்சிகளும் அப்படியே .

கடைசியில் பிரம்மப்பிரயததனப்பட்டு நியாயம் மாதிரி ஏதோ ஒன்றை நிரூபிக்க தம்ம்ம்ம்ம்ம்ம்ம்  கட்டுகிறார்கள் .
செத்துப் போன அண்ணனின் நண்பர்கள் என்று நம்பி வீட்டுக்குள் விட,

உள்ளே நுழைந்த அணில் முதலிய அயோக்கியர்கள் ஏதோ ஒரு சூழலில் ,ரிட்டயர்டு போலீஸ் அதிகாரியைக் கொல்லப் போவதாக மிரட்டி , இளைய மகனை பிளாக் மெயில் செய்து ,

செக்கைக் கண்டு பிடித்து அஞ்சு கோடி ரூபாய் செய்ய முயல ..

naalu 6

அப்பாவின் நற்பெயரும் கெடாமல் அப்பாவின் உயிருக்கும் ஆபத்து வராமல்  இளையமகன் எப்படி சாதித்தான் என்று கதை பண்ணி இருக்கலாமே தினேஷ் . இவனும் தறுதலை என்று ஆன பிறகு என்ன நடந்தால் என்ன ?

மொத்தத்தில் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல……  தப்பில் இருந்து தப்பல 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *