”ஜல்லிக்கட்டு போட்டியின் போது, காளை மாடுகள் மிகவும்ம்ம்ம்ம்ம்ம் கொடுமையான முறையில் உணர்வு இழக்கச் செய்யப்பட்டு துன்புறுத்தப் படுகிறதுஊ ஊ ஊ ஊ ஊ !
காளை மாடுகள் உதை குத்து வாங்குகின்றன அஅஅ….. .தரதரவென தரையில் இழுத்துச் செல்லப்படுகின்றன அஅஅ…… கத்தியால் சதக் சதக் என்று குத்தப்படுகின்றன அஅஅ……
பொதுமக்கள் , பார்வையாளர்கள் பெரிதும் காயம் அடைகிறார்கள்ல்ல்ல்லல்…. .
— மேற்சொன்ன காமெடி காரணங்களை எல்லாம் கூறி, ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே தெரியாத அரைகுறைகள் பலர் , ஜல்லிக்கட்டுக்கான தடையை நீடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கான மனுவில் கிரிக்கெட் ஆட்டக்காரர் விராட் கோலி , சினிமாக்கார ஜான் ஆபிரஹாம், வித்யா பாலன், பிபாசா பாசு , சொனாக்ஷி சின்ஹா, ஷில்பா ஷெட்டி,ஆகியோர் கையெழுத்துப் போட்டு உள்ளனர் .
இதில் நிறைய தமிழ்ப் படங்களில் கச்சைகட்டி…. (சரி …. கம்மியாகக் கட்டி) கல்லா கட்டும் எமி ஜாக்சனும் கையெழுத்துப் போட்டு உள்ளார் என்பதுதான் கவனிக்க வேண்டியது .
ஏம்மா… ‘வெவரம்’ தெரிஞ்ச காலத்துல இருந்து இன்னைக்கு வரை நீ இங்கே தான பொழங்குற…
கையெழுத்துப் போடறதுக்கு முன்ன விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்கமாட்டியா ?