ரஜினியின் வாழ்த்தில் ஆர்யன் ஷாமின் நரபலி திரில்லர் ‘அந்த நாள்’

பிரபல பட அதிபர்  ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷாம். திரைப்படங்களில் நடித்து வரும் ஆர்யன் ஷாம் இயக்குனர் மிஷ்கினுக்கு ஒரு கோடி கொடுத்த நிலையில் அவர் திருப்பித் தராத சர்ச்சை ஒன்றும் இருந்தது ,தற்போது ’அந்த நாள்’ என்ற படத்தில் நடித்து வரும் ஆர்யன் ஷாம்  படம் குறித்தும் மிஷ்கின் உடனான சர்ச்சைகள் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசினார். 

, “நானே கதை வசனம் எழுதி தயாரித்து நடித்துள்ள படம் ’அந்த நாள்’. இப்படம் நரபலி மற்றும் பில்லி சூனியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நரபலி, பில்லி சூனியம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் சான்றிதழ் தர மறுப்பு அளிப்பதாக கூறினர். நரபலி இந்திய அரசியலமைப்பால் தடை செய்யப்பட்டதால் இப்படத்திற்கு சென்சார் தர மறுத்துவிட்டனர். பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டு நடிகை கௌதமி பார்த்துவிட்டு படத்தைப் பாராட்டியுள்ளார். பல்வேறு கட்டுகளுடன் படத்தை ஏ சான்றிதழுடன் வெளியிட அனுமதி அளித்தார்.

மேலும், மிஷ்கினின் ’சைக்கோ’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. பல்வேறு காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அப்படத்திற்கு நான் அளித்த ஒரு கோடி ரூபாய் பணத்தை மிஷ்கின் தற்போது திருப்பி கொடுத்துவிட்டார்.  இந்த அந்த நாள் படம் சைக்கோ படத்தை விட சிறந்த படம். மீண்டும் வாய்ப்பு இருந்தால் அவர் படத்தில் நடிப்பேன்.  

ஏவிஎம் நிறுவனம் பாரம்பரியமிக்கது. அதனால் நரபலி தொடர்பான இப்படம் ஏவிஎம் பெயரில் வெளியாகாது. கிரீன் மேஜிக் என்டர்டெர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் வெளியாகும். என் மனைவி அபர்ணாவிடமும் இதுகுறித்து தெரிவித்துவிட்டேன். இப்படம் நரபலி தொடர்பான படம் என்பதால் கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமானவர்கள் இப்படத்தை தயவு செய்து பார்க்க வேண்டாம்.

’பிரமாண்ட நாயகன்’ என்ற படத்தில் பெருமாள் வேடத்தில் நடித்துள்ளேன். இதற்காக திருப்பதி தேவஸ்தானம் எனக்கு பாராட்டி கடிதம் அனுப்பியது. அதில் ’யூத் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டப்பெயர் அளித்திருந்தனர். இது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. திருப்பதி தேவஸ்தானத்திடம் பேசி என் படத்திற்கு நெருக்கடி அளித்தனர். இந்தப் பட்டத்தை எனது இரண்டு படத்திலும் நான் பயன்படுத்தவில்லை. விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கே தற்போது நெருக்கடி ஏற்படுகிறது. நான் இப்போதுதான் சினிமாத்துறைக்கு வந்துள்ளேன். ’அந்த நாள்’ திரைப்படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்’ என்றார்.

அந்தநாள்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டு வாழ்த்தினார் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *