”குடும்பப்பட ரசிகர்களுக்காகத்தான் இப்போது படங்கள் தேர்வு செய்கிறேன்” – அர்ஜுன் தாஸ்

 தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்த கான் சிட்டி (CON  CITY )ஜூன் 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது. .
 
ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி,படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த  தகவல்களையும், தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
 
சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலப் போராட்டங்கள் முதல், ரசிகர்கள் அளித்த அன்பு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பயணம் மற்றும் எதிர்கால திட்டங்கள் வரை பல்வேறு கேள்விகளுக்கு அவர் மனம் திறந்து பதிலளித்தார். 
 
“நான் நடித்த ஒவ்வொரு படமும் முடிந்த பிறகும் பத்திரிக்கையாளர்கள்  பலர் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அந்த கருத்துக்கள் எனது அடுத்தடுத்த படத் தேர்வுகளிலும், நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என்ன மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும், எந்த மாதிரியான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்கள் கருத்துகள் மூலமாகவே புரிந்துகொண்டேன்,
 
எனது பெற்றோரும்  படம் வெளியான பிறகு ஊடகங்கள் என்ன கூறுகின்றன என்பதை ஆர்வமாகக் கேட்பார்கள்.
 
கான் சிட்டி  குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். கதையைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்,
 
இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சாதாரணமான, நம்மைச் சுற்றி வாழும் இளைஞனைப் போன்றது. கடன்கள், குடும்பப் பொறுப்புகள், வாழ்க்கைச் சவால்கள் என பலரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதனால் இந்த வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,
 
நெகட்டிவ் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், நகைச்சுவை, குடும்பம், உணர்வுபூர்வம் என பல விதமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. புதிய இயக்குநர்களுடன் பணியாற்றுவது புதிய அனுபவங்களைத் தருகிறது. அதனால் இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,
 
திரையரங்குகளுக்கு சென்று நேரடியாக ரசிகர்களை சந்திக்கும் போது குறிப்பாக குடும்ப ரசிகர்களும், மூத்த பெண்களும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதனால்தான் தற்போது குடும்ப ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலான கதைகளையும் அதிகமாகத் தேர்வு செய்து வருகிறேன்.
 
படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கலைஞரிடமிருந்தும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்களுடைய அர்ப்பணிப்பு, ஒழுக்கம், காட்சிகளுக்கான தயாரிப்பு ஆகியவை எனக்கு புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தன. அதுவே ஒரு நடிகராக என்னை தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்கிறது,
 
நான் நடித்த பல நெகட்டிவ் கதாபாத்திரங்களைப் பார்த்தால், அவர்கள் செய்த செயல்கள் தவறாக இருந்தாலும் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். ஒருவன் தன் சகோதரனுக்காகச் செய்கிறான், இன்னொருவன் தனது கடந்தகால காயங்களால் அந்த பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். அதனால் பார்வையாளர்கள் அந்தக் கதாபாத்திரங்களை வெறுப்பதைவிட புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அதுவே அவர்களுடன் ஒரு இணைப்பை உருவாக்குகிறது.”என்றார். 
 
எதிர்காலத்திலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஒரு நல்ல எதிர்மறை கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக செய்வேன். ஆனால் தற்போது அப்படிப்பட்ட எந்த திட்டமும் கைவசம் இல்லை. கதையும், கதாபாத்திரத்தின் ஆழமும் முக்கியம்,” என்று தெரிவித்தார்.
 
தனக்கு மிகவும் பிடித்த திரை வில்லன்கள் குறித்து பேசிய அவர், உலக சினிமாவில் ஹீத் லெட்ஜர் நடித்த ஜோக்கர் கதாபாத்திரம் மிகவும் பிடித்தமானது என்றார். தமிழ் சினிமாவில் தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி ஏற்றிருந்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வில்லன் வேடமாக தன்னை கவர்ந்ததாகவும் கூறினார்.
 
புதிய முயற்சிகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து பேசும்போது, நல்ல கதைகள் மற்றும் சவாலான கதாபாத்திரங்கள் வந்தால் எந்த வகை வேடமாக இருந்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாக அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.
 
மேலும், தற்போது உருவாகி வரும் ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் தலைப்பு குறித்தும் அவர் சுவாரஸ்யமான குறிப்பை பகிர்ந்தார். “படத்திற்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதை இப்போது சொல்ல முடியாது. படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கே அதற்கான பதில் கிடைக்கும்,” என்று மர்மம் கலந்த புன்னகையுடன் கூறினார்.
 
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் இணைந்து, அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *