அசுர குரு @ விமர்சனம்

ஜே எஸ் பி ஃபிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே எஸ் பி சதீஷ்  தயாரித்து வழங்க, விக்ரம் பிரபு,  மகிமா நம்பியார் , யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் ராஜ் தீப் இயக்கி இருக்கும் படம் அசுர குரு. 

ஓடும் ரயிலில் மேற் கூரையை வெல்டிங் வைத்து ஓட்டை போட்டு உள்ளே இறங்கி ரிசர்வ் வங்கியின் பணத்தைக் கொளையடிக்கும் நாயகன் ( விக்ரம் பிரபு) , அடுத்தடுத்து ஹவாலா மோசடி செய்யும் ஒரு தாதா , பண இரட்டிப்பு மோசடி செய்யும் ஒரு நபர் , ஒரு வங்கி உட்பட பல்வேறு தரப்புகளிலிருந்து பெரும் பணத்தை கொள்ளையடிக்கிறான் . 

ஒரு பக்கம் போலீஸ் அவனை துரத்த, இன்னொரு பக்கம் ஹவாலா தாதா , ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை நியமிக்கிறார் . துப்பறியும் நிபுணி ஒருவர் ( மகிமா நம்பியார்) , நாயகனை தேடிக் கண்டு பிடிக்கிறார் . 

அப்போதுதான் அவன் பணத்தை திருடுவது சுயநலத்துக்கு அல்ல என்பதும் , அந்த பணத்தில் இருந்து அவன் ஒரு ரூபா கூட செலவு செய்வதில்லை என்பதும்,  அப்படி அவன் திருடுவது ஒரு வித மனோ வியாதி என்பதும் அந்த மாதிரி ஒரு வியாதி உண்மையிலேயே இருப்பதும் தெரியவருகிறது . 

அதை தடுக்க முடியாது என்பதால்தான் ‘கெட்டவர்களாகப் பார்த்து திருடும் அளவுக்கு அவனை மாற்றினேன்’ என்கிறான் நண்பன் ( ஜெகன்)

போலீஸ் வியாதித் திருட்டு நாயகனை கண்டு பிடிக்க துரத்த, அவனைக் கண்டு பிடித்து இழந்த பணத்தைப் பிடுங்கி அவனை கொன்று போட ஹவாலா தாதா வெறி கொண்டு அலைய , அதற்குள் துப்பறியும் நிபுணிக்கும் நாயகனுக்கும் காதல் வந்து விட, அப்புறம் என்ன ஆச்சு என்பதே இந்த அசுர குரு . இதுவரை தான் நடிக்கும் பாணியிலேயே நடித்து இருக்கிறார் விக்ரம் பிரபு . 

துப்பறியும் நிபுணராக கெத்து , பந்தா , தம் அடித்தல் என்று வித்தியாச முகம் காட்டுகிறார் மகிமா நம்பியார் . நடை உடை பாவனைகளில் கேரக்டருக்கு ஏற்ற கவனம் செலுத்தி இருக்கலாம். 

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மோடியின் தொண்டராக வரும் டீக்கடை ஓனர் ( புரியுதா?) யோகிபாபு சிரிக்க வைக்கிறார் . பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை சீண்டும் காமெடிகள் பலே . 

ஆனால் கெட்டவர்களாக பார்த்து திருடுவதாக சொல்லப்படும் நாயகன் , ரிசர்வ் வங்கியின் பணம் , இன்னொரு வங்கியில் பணம் ஆகியவற்றை திருடுவதாக காட்டுவது…….  செம நக்கல் . 

செல்வகுமாரின் ஒளிப்பதிவு மிக சிறப்பு . இசை மற்றும் படத் தொகுப்பு விஷயங்கள் ஜஸ்ட் ஒகே . 

இதுவரை சொல்லப் படாத வித்தியாசமான கதை . பாராட்டலாம் .

ஆனால் அதை இன்னும் ஒரு கமர்ஷியல் படத்துக்கான  தன்மைகளோடு , லாஜிக்கோடு , இன்னும் சிறப்பான திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் அசுர குரு. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *