கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு மாநில அரசு ஃபெஃப்சி எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு கோடி இருபத்தைந்து லட்சத்தை வழங்கினார் அஜித் .
அடுத்த நாள் முதலே விஜய் ஏதும் அறிவிப்பு செய்யாதது பற்றி கேலியாகவும் கேள்வியாகவும் பல விதமான விமர்சனங்கள் வந்தன .
நிலைமையை சமன் செய்ய விஜய் ரசிகர் மன்றங்கள் ஆங்காங்கே துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஏழைகளுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கின
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் யாருமே எதிர்பார்க்காதபடி அஜித் கொடுத்ததை விட இரண்டு மடங்குக்கும் மேலான தொகையை – மத்திய அரசு , மாநில அரசு, ஃபெஃப்சி , நடிகர் சங்கம் என்று வழங்கியதோடு , ஒரு படி மேலே போய் மக்களுக்கு நேரடியாக வழங்கும் வேலையையும் செய்தார்.
அப்போதும் விஜய் குறித்த முணுமுணுப்புகள் எழுந்தன .
விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் இருப்பதாகவும் மகன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி விடுவானோ என்ற கலக்கத்தில் விஜய் இருப்பதாலும் இதனால் மற்ற விசயங்களை பற்றி சிந்திக்கும் மன நிலையில் அவர் இல்லை என்ற ஒரு தகவல் வந்தது .
இங்கிதம் தெரிந்தவர்கள் விஜய்யை விமர்சிப்பதை நிறுத்தினர் .
இந்த நிலையில் இப்போது , புதுச்சேரி, ஆந்திர , தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களுக்கு தலா அஞ்சு லட்சம் கேரளாவுக்கு பத்து லட்சம் என்று அவர்களுக்கும் சேர்த்து கொரோனா நிவாரண தொகை அறிவித்து உள்ளார் விஜய் .
எவ்வளவு தெரியுமா ?
ஒரு கோடியே முப்பது லட்சம் !
அதாவது அஜித் கொடுத்த தொகையை விட ஐந்து லட்சம் அதிகம்!
பின்னே விஜய்க்கு போட்டி அஜித் தானே . லாரன்ஸ் இல்லையே ?
தொகை இரண்டாம் பட்சம் தான் ….. யாரைத் தாண்டுகிறோம் என்ற வரலாறுதான் முக்கியம் அமைச்சரே !