வள்ளுவன் @ விமர்சனம்

ஆறுபடை புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷைல் குமார் ராஜேந்திரன் தயாரிக்க,சேத்தன் சீனு, ஆஷ்னா சவேரி, ராஜசிம்மன்,ராம்ஸ் , சாய் தீனா,மனோபாலா நடிப்பில் சங்கர் சாரதி எழுதி இயக்கி இருக்கும் படம். 

ஓர் அரசியல்வாதி , ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் , ஒரு வக்கீல் ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். தீவிர விசாரணை நடக்கிறது.
 
பிராமணப்பெண் ஒருத்தி ( ஆஷ்னா சவேரி ) முதியோர் அனாதை இல்லம் ஒன்றில் வாழும் முதியோர்களுக்கு சேவை செய்கிறார். அதைப் பார்த்து ஓர் இளைஞன் ( சேத்தன் சீனு)  அவள் மீது காதல் கொள்கிறான் . அவனும் முதியோர் இல்லத்தில் உள்ளோருக்கு சேவை செய்கிறான். அவளும் அவனைக் காதலிக்கிறாள் . 
 
திருமணத்துக்கு அவள் விரும்ப , அவன் விலகுகிறான்.
 
கொலைகளுக்கான காரணம் என்ன? காதலன் விலகுவது ஏன் என்பதே படம். 
 
படத்துக்கு ஏன் வள்ளுவன் என்று பெயர்?
 
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்ட தனொடு நேர்” என்பது திருக்குறள் (அதிகாரம்: செங்கோன்மை, குறள் 550) 
 
கொடுமையான குற்றங்களைச் செய்பவர்களை ஓர் அரசன்  தண்டித்து ஒழிப்பது, ஒரு உழவன் தனது பயிர் நன்றாக வளர வேண்டும் என்பதற்காக அதற்கு இடையூறாக இருக்கும் களைகளைப் பிடுங்கி எறிவதற்குச் சமமாகும் என்பதே இதன் பொருள். 
 
இந்தக் குறளின்படி இந்தப் படத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதால் படத்துக்கு வள்ளுவன் என்று பெயர். இந்தப் பார்வை பாராட்டுக்குரியது. 
 
படத்தில் முதியோர் இல்லக் காட்சிகள் மனத்தைத் தொடும்படியாக நெகிழ்வாக இருக்கின்றன. 
 
மற்றபடி டெம்ப்ளேட் காட்சிகள். வழக்கமான கதை . காமாசோமா காட்சிகள் மனோபாலா எல்லாம் நடித்திருப்பது படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தை உணர்த்துகிறது. 
 
வக்கீல் அயோக்கியர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அம்பேத்கார் சிலை மீது மண்ணை வாரித் தூற்றும் காட்சி அயோக்கியத்தனமானது . 
 
சேவை செய்யும் பிராமண நாயகி பின்புலம் அந்த வன்மத்துக்கு காரணம் கற்பிக்கிறது. 
 
போன பிறவியில் ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தை கடமைக்கு எடுத்தால் அதன் பெயர் வள்ளுவன்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *