விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குநர் பரதனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பைரவா’ திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளி வருகிறது
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மொத்தம் 55 நாடுகளில் பைரவா ரிலீஸாகவுள்ளதாக இந்தப் படத்தை வெளிநாடுகளில் விநியோகிக்க இருக்கும் A & P நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக தமிழ்ப் படம் வெளியாகும் நாடுகளோடு சேர்த்து தற்போது சில புதிய நாடுகளிலும் ‘பைரவா’ வெளிவரவுள்ளது.
நைஜீரியா, கானா, கென்யா, உகாண்டா, டான்சானியா, போட்ஸ்வானா, காங்கோ, எத்தியோப்பியா, ருவாண்டா, போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமன்றி
உக்ரைன், அல்பேனியா, லிதுவேனியா, லாட்வியா, போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 55 நாடுகளில் ‘பைரவா’ வெளியாகவுள்ளது.
அந்தந்த நாடுகளில் வாழும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் இந்தப் படத்தை ஆர்வத்துடன் பார்க்க விரும்பியதன் பேரில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப் படுகிறது

