ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்புவின் அமைதிப் போராட்டம்

sikbu-1

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஒரு வித்தியாசமான அமைதிப் போராட்டத்தில்  வியாழக்கிழமை  (12-01-2016) மாலை ஐந்து மணிக்கு ஈடுபடும் நடிகர் சிம்பு ,

அதற்காக கட்சி , சாதி மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் . இது பற்றிப் பேச இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சிம்பு .

“இலங்கை, மும்பை , கர்நாடகா, கேரளா , ஆந்திரா என்று எல்லா இடங்களிலும் தமிழனை அடித்தார்கள் .. அதுவாவது தமிழ்நாட்டுக்கு வெளியே .

காவிரி பிரச்னை , மீத்தேன் வாயு, கெயில் திட்டம் , அணு உலை ,என்று எல்லா வகையிலும் தமிழ் நாட்டுக்குள்ளேயே தமிழனின் வயிற்றில் அடித்தார்கள் .

இது போதாது என்று நம் வீட்டுக்குள்ளேயே  வந்து நம்மை அடிக்கும் வேலைதான் ஜல்லிக்கட்டுக்கான தடை . தினசரி ஆயிரக் கணக்காக ஆடுகளையும் கோழிகளையும் கொன்று தின்று கொண்டு,

கண்ணுக்குட்டிக்கான பாலை ஏமாற்றி கறந்து காபி போட்டுக் குடித்துக் கொண்டு, காளைகளை பிள்ளை போல வளர்க்கும் நம்மிடம் ஜல்லிக்கட்டு காட்டு மிராண்டித்தனம் என்பது அயோக்கியத்தனம் .

simbu-2

விசயம் தெரியாத வெளிநாட்டுகாரன் , வடக்கத்திக்காரன் ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனம் என்றால் கூட பரவாயில்லை . தமிழ்நாட்டுலேயே கொஞ்ச  பேர் சொல்றான் . இவன்லாம் என்ன மாதிரி ஆளுன்னே தெரியல .

 எனக்கு வாய்ப்பு வசதி புகழ் எல்லாம் கொடுத்தது என் தாய் மொழியான தமிழும் அதன் கலாச்சாரமும்தான் , இனிமேலும் என்னால் சும்மா இருக்க முடியாது .

அதே நேரம் நம் போராட்டம் அமைதியானதாக இருக்க வேண்டும். .

எனவே  நாளை (வியாழக்கிழமை ) மாலை ஐந்து மணிக்கு நான்  சென்னை திநகர் மாசிலா மணி தெருவில் உள்ள எனது வீட்டு வாசலில் கருப்பு உடை அணிந்து கறுப்புக் கொடியோடு பத்து நிமிடம் அமைதியாக நின்று ,

ஜல்லிக்கட்டுக்கான தடைக்கு எதிராக  அமைதிப் போராட்டம் நடத்த இருக்கிறேன் . என் தந்தையும் என்னுடன் போராட்டத்தில் கலந்து கொள்கிறார் .

என் வேண்டுகோள் என்னவென்றால் அதே நேரம் எனது ரசிகர்கள் , தமிழ் உணர்வாளர்கள் , தமிழக மக்கள் அனைவரும் அப்போது  அவர்கள் எங்கே என்ன வேலையில் இருந்தாலும் ,

simbu-3சரியாக ஐந்து மணிக்கு கருப்பு உடை அணிந்து கறுப்புக் கொடியோடு பத்து நிமிடம் அமைதியாக இருந்து ஜல்லிக்கட்டு தடைக்கான எதிர்ப்புணர்வை காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன் .

இது நம் ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரம் .

எனவே கட்சி , சாதி மத, வேறுபாடு இன்றி எல்லோரும் இதில் ஈடுபட்டு அதை  ஃசெல்பி எடுத்து பரப்புங்கள் . நம் ஒற்றுமை உணர்வை மத்திய அரசுக்கு காட்டுவோம் ” என்றார் .

அதன் பின்னர் வந்து பேசிய  டி. ராஜேந்தர் , “திரையில் ஹீரோவாக வந்து பஞ்ச் டயலாக் பேசுவது வீரம் அல்ல . என் மகன் தரையிலும் தான் ஒரு ஹீரோ என்று நிரூபித்து உள்ளான் .

இந்த போராட்டத்தில் அனைவரும் ஈடுபட்டு ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் ” என்றார்

பாராட்டுக்குரிய விஷயம்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *