இயக்குனர் பாலாஜி மோகன் தயாரிக்கும் புது இணையத் தொடர்

TREND LOUD INDIA DIGITAL    மற்றும்  இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகனின்   OPEN WINDOW நிறுவனங்கள் இணைந்து தங்களது  இரண்டாவது படைப்பை பெருமையுடன்  அறிவித்துள்ளன. இந்த புதிய தமிழ் இணைய தொடர்  பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார். 
 
அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  பிப்ரவரி  2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. 
 
எழுத்து & இயக்கம்  விக்னேஷ் விஜயகுமார்
 
கிரியேட்டிவ்  புரடியூசராக பாலாஜிமோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி  இத்தொடரை தயாரிக்கிறார்.  சஞ்சய் சுபாஷ் & வித்யா சுகுமாரன் இணை தயாரிப்பு செய்கின்றனர். 
 
ஒளிப்பதிவு : சிவா GRN 
இசை : பரத் சங்கர் 
படத்தொகுப்பு : ஜூலியன் 
கலை இயக்குநர் : ஶ்ரீராமன் E 
காஸ்ட்யூம் டிசைனர்: திப்தி தேசாய்
 
பப்ளிசிடி டிசைன் : சிவகுமார் S (Sivadigitalart)
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : விக்டர் பிரபாகரன்.M
கிரியேட்டிவ் புரடக்சன் குழு : நிவேதா பாஸ்கரன், தன்யா பாலகிருஷ்ணா
புரடக்சன் மேனேஜர் : MV ரமேஷ் 
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *