எப்படி இருக்கும் முந்தானை முடிச்சு ரீமேக்?- இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் சொல்கிறார்

சசி குமார் நாயகனாக நடித்த சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் இயக்குனர் எஸ் ஆர்  பிரபாகரன்.. கிராமியப் பின்னணியில் அமைந்த வித்தியாசமான் யதார்த்தமான திரைக்கதையின் மூலம் வெற்றி பெற்ற படம் . 

உறவுகளுக்குள் வீடுகளில் பஞ்சாயத்துக் காட்சிகளை யதார்த்தமாக அமைத்துப் படம் பிடிப்பதில் இவர் வல்லவர் . 
 
கதிர்வேலனின் காதல்  உள்ளிட்ட படங்களுக்குப் பின் மீண்டும் சசிகுமார் நடிப்பில் இவர் இயக்கி இருக்கும் கொம்பு வச்ச சிங்கம் டா படம் பொங்கலுக்கு வெளியாகி இருக்கிறது . 
 
சுந்தர பாண்டியன் படத்தில் இடம் பெற்ற ரெக்கை முளைத்தேன் பாடலின் பெயரில் இவர் இயக்கி இருக்கும் படம் ஒன்று தயாராகி வருகிறது . 
 
அடுத்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்க இருக்கும் எஸ் ஆர் பிரபாகரன் அதை அடுத்து இயக்கப் போகும் படம் பரபரப்பான ஒன்று 
 
பாக்யராஜ் இயக்கி நடித்து முதன் முதலில் தமிழில் ஒரு கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆன படம் என்ற புகழைப் பெற்ற முந்தானை முடிச்சு படத்தை ரீம்க் செய்து இயக்கவிருக்கிறார் பிரபாகரன் 
 
அது பற்றிப் பேசும் பிரபாகரன், ” முந்தானை முடிச்சு ஒரு மாபெரும் வெற்றிப் படம் . அதன் ஒவ்வொரு காட்சிகளும் மக்கள் மனதில் இன்றும் நினைவில் இருக்கின்றன . மீண்டும் உருவாகும் நிலையில் சஸ்பென்ஸ் என்று எதையும் மெயின்டைன் செய்ய முடியாது. எனவே அதற்கேற்ப காட்சிகளை சுவாரஸ்யமாக மாற்றிக் கொண்டு இருக்கிறோம் . அதே போல  கால மாற்றத்துக்கு ஏற்ப திரைகதையில் மாற்றம் செய்து கொண்டும் இருக்கிறோம் . 
 
பழைய முந்தானை முடிச்சு போலவே  ரீமேக் ஆகி  வரும் முந்தானை முடிச்சு படத்தையும் வெற்றிப் படமாக்குவோம் ” என்கிறார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *