‘பயம் ஒரு பயணம் ‘ படம், இன்னொரு ‘யார்’ ?

bayam  3
ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும்  ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில்  திரையிடப்பட்ட இந்த படத்தின் 20 நிமிட சிறப்பு காட்சித்  தொகுப்பு அப்படி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது .
 நிகழ்ச்சியின் சிறப்பு  விருந்தினர்களாக மூத்த தயாரிப்பாளரும், தென் இந்திய பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவருமான சி கல்யாண், புகழ் பெற்ற திகில் பட இயக்குனர் ‘யார்’ கண்ணன்,
தயாரிப்பாளர் கணேஷ் (ரெக்க), இயக்குனர் சாம் ஆண்டன், இயக்குனர் ராம்பாலா, காட்றகட்ட பிரசாத், ரவி கொட்டாரக்காரா 
மற்றும் பயம் ஒரு பயணம் படத்தின்  தயாரிப்பாளர்கள் துரை மற்றும் சண்முகம் (ஆக்ட்டோஸ்பைடர் புரொடக்ஷன்), இயக்குனர் மணிஷர்மா, கதாநாயகன் டாக்டர் பரத்,
 முன்னணி கதா பாத்திரத்தில்  நடிக்கும் மீனாக்ஷி தீட்சித், ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரூ,  இசையமைப்பாளர் ஒய் ஆர் பிரசாத், படத்தொகுப்பாளர் எல் வி கே தாஸ்,
bayam 1
கலை இயக்குனர் கார்த்திக் ராஜ்குமார் மற்றும் சவுண்ட் என்ஜினீயர் துக்காராம் ஆகியோர் பங்கு பெற்றனர்.  
“தமிழ் சினிமா வரலாற்றில் அடுத்த ஒரு ‘யார்’ திரைப்படமாக அமைய இருக்கும் படம் ‘பயம் ஒரு பயணம்’ தான் என்பதை நான் உறுதியாக சொல்லி கொள்கிறேன் ” என்று கூறினார்,
 இயக்குனர் ‘யார்’ என்ற மறக்க முடியாத திகில் படத்தைக் கொடுத்த கண்ணன் . 
“பயம் ஒரு பயணம் படத்தின் சிறப்பு காட்சி தொகுப்பை நான் காண்பதில் பெரும்  மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த இருபது நிமிட காட்சித் தொகுப்பே இப்படி ஒரு பயம் கலந்த திகில் அனுபவத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது. 
என் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் பயந்து நடுங்கி என் மேல சாய்ந்தார் 
என்றால் மொத்த  படமும் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். நிச்சயமாக பயம் ஒரு பயணம் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும்,
 திரையரங்கில் பயத்தால் அலற போகிறார்கள்…” என்று கூறினார் ‘தில்லுக்கு துட்டு’ பட இயக்குனர் ராம்பாலா.
bayam 2
“ராம்பாலா சொன்னது மாதிரி  நான் ஒரு காட்சியில் என்னை அறியாமல் பயந்து விட்டேன் .
பின்னணி  இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகிய மூன்றும் தான்  ஒரு திகில் படத்திற்கு தேவையான மூன்று முக்கிய அம்சங்கள்.
அந்த மூன்று அம்சங்களும் பயம் ஒரு பயணம் படத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது.  
இதற்காக உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்…” என்று கூறினார் ‘டார்லிங்’ பட  இயக்குனர் சாம் ஆண்டன்.
“விஜய் சேதுபதி நடித்த ‘பீட்ஸா’ படத்திற்கு முன்பு நான் இந்த பயம் ஒரு பயணம் படத்தின் கதையை எழுதினேன். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு தான் அந்த கதையின் மூலம் நான் முழு திருப்தி அடைந்தேன்..
.தற்போதைய காலத்தில் உள்ள திகில் படங்கள் எல்லாம், திகில் என்ற மைய கருத்தை விட்டுவிட்டு காமடிக்கு முக்கியத்துவம் தந்து பயணிக்கின்றன.
bayam 4
எங்களின் பயம் ஒரு பயணம் திரைப்படம் அப்படி இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு திகில் படமாக மட்டும்தான் இருக்கும். 
பொதுவாகவே மூன்று பரிமாணத்திற்குள் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. ஆனால் எங்களின் பயம் ஒரு பயணம் திரைப்படமானது ரசிகர்களை,
 (காலம் என்கிற ) நான்காவது  பரிமாணத்திற்குள் பயணிக்கச் செய்யும்…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பயம் ஒரு பயணம் படத்தின் இயக்குனர் மணிஷர்மா.
தயாரிப்பு துறையில் பயம் ஒரு பயணம் படம் மூலம்  அடியெடுத்து வைக்கும் இளம் தயாரிப்பாளர்கள் துரை மற்றும் சண்முகம் கூறுகையில், “வெறும் பயம் மட்டும் எங்கள் படத்தில் இல்லை..
அதையும் தாண்டி ஒருவித முக்கிய சிறப்பம்சத்தை நாங்கள் பயம் ஒரு பயணம் படத்தில் உள்ளடக்கி இருக்கிறோம்…படம் பார்த்த பிறகு அதை ரசிகர்கள் உணருவர்…” என்றனர். 
bayam 5
“ஒருபுறம் இயக்குனர் மணிஷர்மா பயம் ஒரு பயணம் படத்திற்கு தந்தையாக செயல்பட, இந்த  படத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரூ. 
ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் பயம் ஒரு பயணம் படமானது நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளையும் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் ஒருசேரப் பெறும். 
வெற்றி பாதையில் பயணிக்க இருக்கும் ஒட்டுமொத்த பயம் ஒரு பயணம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் மூத்த தயாரிப்பாளர் சி கல்யாண்.
சும்மா சொல்லக் கூடாது .. திரையிடப்பட அந்த காட்சித் தொகுப்பு ஒரே வீட்டுக்குள் நடப்பதாக  வித்தியாசமான மிரட்டல் காட்சிகளுடன் …
(உதாரணமாக ஃபிரிட்ஜை திறக்க உள்ளே இருந்து வந்து பிரிட்ஜுக்குள் இழுக்கும் பேயின் கை ) அசத்தலாக இருந்தது 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *