சிக்ஸ்டீன் நைன் எம் எம் பிலிம் சார்பில் ராகுல் கபாலி எழுதி தயாரித்து இயக்க, ஜே டி , குரு சோமசுந்தரம்,ஹரீஷ் உத்தமன், ஜான் விஜய், சாய் பிரியங்கா ரூத், மற்றும் பலர் நடிப்பில் வந்திருக்கும் படம்.
ஓவியனாக இருந்து கொலைகாரனாக மாறிய ஒருவன். கொலையில் வழியும் ரத்தத்தை வைத்து ஓவியம் வரையும் கொலைஞன் . அவனுக்கென்று மற்றோர் ஏற்க முடியாத சில நியாயங்கள் .

எழுத்தாளர் ஒருவன் அவனை சிறையில் சந்தித்து அவன் செய்த கொலைகள் மற்றும் அதற்கான காரணங்களைப் பற்றிக் கேட்கிறார் . அவன் சொல்லும் ஒவ்வொரு சம்பவமும் தனித்தனி அத்தியாயங்களாக விரிகிறது . ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொலைகாரனின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்கள் வருகிறார்கள் .

இருவருக்குமான சந்திப்பு எப்படி முடிந்தது என்பதே படம்.
படத்தின் பலம் இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளர் பிரவீன் மற்றும் நந்தா ஆகியோருக்குமான ஒத்திசைவு .
பிரஞ்சுப் படங்களை நினைவூட்டும் படமாக்கல். வித்தியாசமான கோணங்கள் . இருள் ஒளிப் பயன்பாடு மற்றும் காட்சி நகர்வுகள்.
கே யின் பின்னணி இசையும் அகிலின் படத் தொகுப்பும் கவனிக்க வைக்கின்றன.

ஒரு நிலைவரை ரசிக்க முடிந்தாலும் நீண்ட நீண்ட உரையாடல்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன .
காட்சி அனுபவம் கவனிக்க வைத்தாலும் படமாக வெகு ஜன ரசிகனைக் கவனிக்க வாய்ப்பில்லாத படம்.