ஜெயம் ரவி – அரவிந்த் சாமியை கொண்டாடும் வருண்

varun 2
‘தனி ஒருவன்’  படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி இணைந்து நடித்திருக்கும்  ‘போகன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது.

 ‘ரோமியோ ஜூலியட்’ புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் இந்த ‘போகன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி – ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும்,

நடிகர் வருண் மிக முக்கிய கதாபாத்திரத்திலும்  நடித்திருக்கின்றனர்.  ‘போகன்’ படத்தில் நடிகர் வருண் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
“ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி – ஹன்சிகா மோத்வானி என தலைச் சிறந்த நட்சத்திர கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘போகன்’ படத்தில் என்னுடைய பங்கும் இருப்பது,

varun 3

எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக  இருக்கின்றது. ஒரு வளர்ந்து வரும் நடிகருக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்?
ஆரம்பத்தில் ஜெயம் ரவி சார் மற்றும் அரவிந்த் சுவாமி சார் ஆகியோரோடு இணைந்து நடிப்பது சற்று பதட்டமாக தான் இருந்தது.
 
ஆனால் நாளடைவில் அவர்கள் எனக்கு அளித்த சுதந்திரமும், உற்சாகமும் என்னை பதட்ட நிலையில் இருந்து வெளி கொண்டு வந்துவிட்டது.  நான் நடித்த  காட்சிகள் சிறப்பாக அமைய, அவர்கள் இருவரும்

 என்னோடு  உடன் இருந்து வழி நடத்தியது மட்டுமில்லாமல் எனக்கு சிறந்ததொரு ஆசானாகவும்  இருந்து என்னை ஊக்குவித்தனர்

varun
இயக்குநர் லக்ஷ்மன் சார் என்னுடைய கதாபாத்திரத்திற்காக, ஒரு தனித்துவமான நடை பழக்கத்தை எனக்கு  சொல்லி கொடுத்து இருக்கிறார்.  
அதற்கான காரணத்தை ‘போகன்’ திரைப்படத்தை பார்த்த பின்பு ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். தொடர்ந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் படங்களில்  பணியாற்றி வருவதை நான்  பெருமையாக கருதுகிறேன்.
வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி, என்னுடைய கலை பயணத்தில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என பெரிதும் நம்புகிறேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் நடிகர் வருண்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *