” PETA அப்படித்தான் சொல்லும் ” — சிங்கம் 3 விழாவில் ‘ஜல்லிக்கட்டு’ சூர்யா

sing 3
தமிழின் முதல் மூன்றாம் பாகப் படம் என்ற பெருமை சிங்கம் 3 படத்துக்கு கிடைத்துள்ளது .ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, சூர்யா, அனுஷ்கா , ஸ்ருதிஹாசன், சூரி நடிப்பில்
ஹரி இயக்கி இருக்கும் இந்தப் படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளிவருகிறது  இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தது படக் குழு .
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி ” படப்பிடிப்பில் ஐநூறு பேர் ஒரு ஷாட்டுக்குள்  நின்றாலும் ஒவ்வொரு தனி நபரையும் கூர்ந்து கவனித்து
அவரகளது தவறுகளை சுட்டிக்காட்டி  சரி செய்யும் இயக்குனர் ஹரியின் திறமையை  பார்த்து அசந்து போனேன் .
சூர்யா அண்ணனின் உழைப்புக்கு ஈடு இணையே இல்லை .
sing 5
ஹாரீஸ் சாரின் பாட்டும் இசையும் சூப்பரா வந்திருக்கு.தயாரிப்பாளர் ஞான வேல் ராஜா நல்லபடியா கவனிச்சிக்கிட்டார் . படம் நல்ல படமா வர்றதுக்கு வேற என்ன வேணும் ?”  என்றார்.
இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் பேசும்போது” சாமி படத்தில்தான் நானும் ஹரியும் ஒண்ணு சேர்ந்தோம் . என்னோட முதல் கமர்ஷியல் படம் அதுதான் .
இந்தப் படத்துல ஹரியோடு மட்டும் இல்ல என்னோடு ரொம்ப நெருக்கமான சூர்யா சாரோடும் இணைந்தது ரொம்ப சந்தோசம் .
படத்தைப் பார்க்கும்போது ‘இதுக்கு மியூசிக்கே தேவை இல்லை சார் . அவ்வளவு பரபரப்பா இருக்கு’ என்று நான் ஹரியிடம் சொன்னேன். அவர் ‘சார் அப்படி எல்லாம் நினைக்காதீங்க .
sing 7
உங்க பங்குக்கு ஏத்தி விடுங்க ‘என்று சொன்னார் . அப்படியே எல்லாரும் உழைச்சு இருக்கோம் . ஒரு நல்ல போலீஸ் அதிகாரி பற்றிய படம் இது .
இந்தக் காலகட்டத்துக்கு தேவையான அவசியமான படம் இது ” என்றார் . இயக்குனர் ஹரி பேசும்போது ” பொதுவா என் படம் வேகமா  இருக்கணும் என்று ரசிகர்கள் நினைக்கிறாங்க 
அப்படியே நானும் பண்ண ஆரம்பிச்சுட்டேன் .
ஆனா அப்படி பண்ணும்போது படம் பார்த்து முடிக்கும்போது ‘படத்துல  ஒண்ணுமே இல்லியே’ என்று தோன்றுகிற ரிஸ்க்கும் இருப்பதால் கவனமா பண்றேன் .
இந்தப் படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை ஏதாவது விசயத்தில் டார்ச்சர் பண்ணி இருப்பேன்னு  நினைக்கறேன் .
sing 2
ஆனா அவர் அதை எல்லாம் பொறுத்துக்கிட்டு நல்லா பண்ணி கொடுத்தார் . அவர் டீம் நல்ல டீம் .ஹாரிஸ் ஜெயராஜ் சாரோட வொர்க் பண்றது சந்தோஷமான விஷயம் .
இந்தப் படத்திலும் அவர் நல்ல இசை கொடுத்து இருக்கார் .சூர்யா சாரோட எனக்கு இது அஞ்சாவது படம் . அதுவும் சிங்கம் படத்துல மூணாவது பாகம் . எவ்வளவோ நாட்கள் சேர்ந்து இருக்கோம் .
இந்தப் படத்துக்கே சுமார் நூற்றி இருபது நாள் சேர்ந்து வேலை செஞ்சோம். இதுவரையில் எனக்கும் அவருக்கும் ஒரு சிறு மனஸ்தாபம் கூட வந்தது இல்ல . அந்த அளவுக்கு எங்களுக்குள்ள புரிதல் . அதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும் . அவர் என் சொந்த சகோதரர் போல ” என்றார்

சூர்யா தனது பேச்சில் “

sing 8
ரொம்ப சந்தோஷமா இருக்கு . படம் ரொம்ப நல்ல வந்து இருக்கு . ஹரி சார் ஸ்பீடாவும் வேலை செய்வார் . நேர்த்தியாவும் வேலை செய்வார் .அது ரொம்ப ஆச்சர்யமான  விஷயம் .
இந்தில சஞ்சய் லீலா பன்சாலி எல்லாம் ஒரு நாளைக்கு ரெண்டு ஷாட் மட்டும்தான் எடுப்பார்னு சொல்வாங்க . ஆனா ஹரி ஒரு நாளில் தொண்ணூறு தொண்ணூத்தி அஞ்சு ஷாட் எடுப்பார் .
சிங்கம் முதல் பாகம் பார்த்த உடனே அம்மா என் கிட்ட ” டயலாக் ரொம்ப நல்லா இருக்கு . எப்படி ஹரி அவ்ளோ சிறப்பா எழுதறார்னு பாராட்டினாங்க .
sing 4
இப்போ இந்த படத்தை பார்த்துட்டு ‘கண்ணு படம் சூப்பரா இருக்கு’ ன்னு அத்தை பாராட்டுனாங்க . அந்த அளவுக்கு குடும்பப் பாங்கான படம் . இது நிச்சயாம எல்லா மக்களையும் கவரும் ” என்றார் .
நன்றி கூறிப் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ” எல்லோரும் பொய் சொல்லும்போது என்னால உண்மையை மறைக்க முடியவில்லை .
ரஜினிக்கு அடுத்து அதிக வசூலும் பிசினசும் தமிழகத்திலும் ஆந்திராவிலும்  வெளி நாட்டு தமிழர்கள் மத்தியிலும் இருப்பது சூர்யாவுக்குதான் .
sing 1
இதை நாங்கள்  இதுவரை சொல்லாமல் இருப்பதால் மற்றவர்கள் தங்களை உயர்த்தி பேசிக் கொள்கிறார்கள் .
சிங்கம் 3 படம் இப்போதே நூறு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகி விட்டது . ” என்றார்
PETA எதிர்ப்பை சூர்யா  சிங்கம் 3 படத்தின் விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக PETA அமைப்பின்  தலைவர் பூர்வா குற்றம் சாட்ட அதற்கு சூர்யா நடவடிக்கை சட்ட நடவடிக்கை எடுக்க,

அந்தப் பெண்மணி மன்னிப்பு கேட்டது பற்றி பேச்சு வந்தபோது ,

நான் சூர்யாவிடம் ” அந்தக் கடிதத்தில் கூட அவர் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறாரே ஒழிய ,  ஜல்லிக் கட்டு மிருகவதை ,

sing 6

அது தடை செய்யப் பட வேண்டிய ஒன்று என்ற தொனியில்தானே சொல்லி மன்னிப்புக் கேட்கிறார் . அத எப்படி எடுத்துக்கிறது ? ” என்றேன்

அதற்கு பதில் சொன்ன சூர்யா ” அதுதானே அவர்கள் வேலை . அவர்கள் அப்படிதான் சொல்வார்கள் . மாறி நல்லவிதமா சொன்னால்தான் ஆச்சர்யப்படனும்.

அவர்கள் சொல்வதால் ஜல்லிக்கட்டு மிருகவதை ஆகி விடாது ” என்றார் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *