ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும் இணைத்து தயாரிக்க,
சதுரங்க வேட்டை வெற்றி படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன் ( நட்டி ) கதாநாயகனாக நடிக்க,
மது பண்டார்கர் இயக்கிய காலண்டர் கேர்ள் உட்பட சில இந்திப் படங்களில் நடித்த ருஹி சிங் கதாநாயகியாக நடிக்க,
கலை இயக்குனர் சாபுசிரிலிடம் உதவியாளராகப் பணியாற்றிய தாஜ் என்பவர் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் படம் “ போங்கு “
அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன்,
மயில்சாமி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி . இசை ஸ்ரீகாந்த் தேவா .
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ” நல்ல கமர்ஷியலான படம் இது .
பாலிவுட்டே கொண்டாடும் ஒளிப்பதிவாளர் நட்டி சாரை ஒளிப்பதிவு செய்தது சந்தோஷமாக இருக்கிறது ” என்றார்
இயக்குனர் தாஜ் தனது பேச்சில் ” போங்கு படம் டிராவலிங் பற்றிய படம்.
நட்டி பேசும்போது ”
கார் திருடு பற்றிய கதை இது ப. இயக்குனர் சிறப்பாக கமர்ஷியலாக இயக்கி இருக்கிறார். தயாரிப்பாளர் ரகு படத்துக்காக விலை உயர்ந்த விதம் விதமான கார்களை கொண்டு வந்து இறக்கினார் .
காரை எப்படி எல்லாம் சுலபமாக திருட முடியும் என்பதை சம்மந்தப்பட்ட கார் கம்பெனி ஆட்களே விளக்காமாக சொன்னார்கள் .
அதை எல்லாம் காட்டினால் அவ்வளவுதான் . நாங்கள் கதைக்கு தேவைப்படும் அளவுக்கு லைட்டா சொல்றோம் ” என்றார் .
வரும் ஜூன் இரண்டாம் தேதி வெளிவரும் இந்தப் படத்தை கே ஆர் பிலிம்ஸ் சரவணன் வெளியிடுகிறார்




