ஸ்வஸ்திக் சினிவிஷன் பி.லிட் சார்பில் சோஹ
ம் அகர்வால் எஸ் .பி.டி.ஏ.ராஜசேகர் ஆகியோர் தயாரிக்க,
அர்ஜுனா , யாமினி பாஸ்கர், வினு கிருத்திக் , நிரஞ்சன் , சுமன் , சுரேஷ் , பாண்டியன் , ஆகியோர் நடிப்பில்
எஸ் .பி.டி.ஏ. குமார் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் “முன்னோடி” . படத்தின் நடன இயக்குநர் சந்தோஷ் , படத் தொகுப்பாளர் என்.சுதா , இசை யமைப்பாளர் கே.பிரபு சங்கர்
படத்தின் செய்தியாளர் சந்திப்பில் முன்னோட்டமும் , பாடல்களும் திரையிடப்பட்டன , கமர்ஷியலான முன்னோட்டம் .
மற்றும் அழகான கிராபிக்ஸ் பின்னணிகளோடு உருவாக்கப்பட்ட ஒரு பாடல் அருமையாக இருந்தது
படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி. மதன் நிகழ்ச்சியில் பேசும் போது, ” நண்பர் ஒருவர் இந்தப் படம் பற்றி சொன்னார் அப்போது எனக்கு ஆர்வமே இல்லை.
‘ஏற்கெனவே மூன்று படங்கள் போய்க் கொண்டு இருக்கிறது வேண்டாம்’ வேற யாரிடமாவது பேசிப் பாருங்கள் விட்டு விடுங்கள் என்றேன்.
‘பாடல்கள் , ட்ரெய்லரையாவது பாருங்கள்’ என்றார்கள் .விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன்.முதலில் ‘அக்கம் பக்கம் ‘பாடல் பார்த்தேன். பிடித்திருந்தது.
யாரிடம் வேலை பார்த்தீர்கள்? என்றேன், இயக்கி இருக்கும் குமாரிடம் . ”யாரிடமும் உதவியாளராக வேலை பார்க்கவில்லை” என்றார்.
யாரிடமும் வேலை பார்க்காமலேயே இவ்வளவு சிறப்பாக எடுத்திருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டேன்
அவரிடம் பேசியபோது பொதுவான விஷயங்கள் பேசினோம் . தான் சொந்தமாக சம்பாதித்த பணத்தில் படத்தை எடுத்ததாகக் கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது.
அவரது சினிமா ஆர்வம் சாதாரணமானது இல்லை என்பது புரிந்தது . எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்த முன்னோடி படம் வியக்க வைத்தது. சற்றும் யோசிக்காமல் வாங்கி விட்டோம். வெளியிடுகிறோம்
‘முன்னோடி ‘ படம் தவிர வேறு இரண்டு கதைகளும் தயாராக வைத்து இருக்கிறார்.
வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்ட போது, அவனுடைய பீரங்கி உள்ளிட்ட ஆயுதப் படையை ஒற்றை மனிதனாக நடுங்க வைத்த ஒரு தமிழ் வீரனின் உண்மை வரலாற்றை வைத்து,
ஒரு கதை பண்ணி இருக்கிறார் .பிரமாதமாக இருக்கும் . இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. ” என்றார்
இயக்குநர் குமார், பேசும் போது தன் மனக்குமுறலை வெளியிட்டார்.
” நான் சினிமா பற்றிய எந்தவித பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன்.
என் அப்பா சினிமாவே பார்த்ததில்லை. எனக்கும் சினிமா பார்க்க அனுமதியில்லை.
சினிமா இயக்கம் பற்றித் தெரியாது. ஆனால் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தது. 18 வயதில் பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை.
அதற்குள் மனைவி குழந்தைகள் என்று குடும்பம் மாறியிருந்தது. இருந்தாலும் நான் விட வில்லை. அடுத்த் 18 வருஷம் கழித்து தான் சினிமாவுக்கு வர என் குடும்பத்தாரிடம் அனுமதி கிடைத்தது.
அப்போது என்னை சினிமாவில் விடவில்லை இப்போது நானே சம்பாதித்து என் காசில் எடுத்து இருக்கிறேன். இப்போதும் கூட குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள்.
இந்தப் படத்துக்காக இரண்டு வருஷம் கஷ்டப்பட்டேன். என் கஷ்ட நஷ்டங்களை குடும்பத்தினர் பொறுத்துக் கொண்டார்கள்.
அவர்களின் கவலை நான் சினிமாவுக்கு வந்து நாப் சிரமப் படக்கூடாதே என்பதுதான். 18 வருஷம் சுமந்து கருவாகி உருவாகி வளர்ந்த குழந்தையை இரண்டு வருஷம் நெஞ்சில் சுமந்த அந்தக் குழந்தையை,
ஆடல், பாடல் , விளையாட்டு எல்லாம் தெரிந்த அந்தக் குழந்தையை சுதந்திரமாக விளையாட திறமை காட்ட அனுமதிக்கிறார்களா ? இல்லை.
இவ்வளவு கஷ்டப்பட்டு ரத்தமும் சதையுமாக வளர்த்து இருக்கிறோம். ஆனால் யாரும் பார்க்கத் தயாரில்லை.
தியேட்டரில் போட்டால் பத்து பேர் வருவானா ? என்கிறார்கள். ஒவ்வொருவரும் இப்படி நெஞ்சில் குத்துகிறார்கள்.
நல்லா இருந்தாலும் பார்க்க எவனும் வர மாட்டான் என்கிறார்கள். புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தால் கடலில் குதித்து சாக வேண்டுமா?
நல்ல வேளை படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் சார் பார்த்தார். எதுவுமே நினைக்கவில்லை. நிஜமான அன்போடு அணுகினார் .ஆதரவு கொடுத்து இருக்கிறார்.
படத்தை வெளியிடுகிறார். அவருக்கு நான் காலமெல்லாம் கடமைப் பட்டிருக்கிறேன்.இதில் நிறைய பேர் நடித்து இருக்கிறார்கள் இருந்தாலும் இது ஒரு டெக்னீசியன் படம் என்றுதான் சொல்வேன்.
என் அடுத்தடுத்த படங்களில் நடிகர்கள் எல்லாம் மாறலாம். ஆனால் தொழில் நுட்பக் கலைஞர்களை மாற்ற மாட்டேன். அவ்வளவு உழைத்திருக்கிறார்கள். ” என்று இருந்தது அவரது பேச்சு .
படம் நல்லபடியா வரட்டும் !