இப்போது கண்ணன் வீடு பார்த்துக் குடி இருப்பதும் லூயிஸ் வாழும் பகுதியுயல்தான் . அங்கு அவனுக்கு நட்பாக பல குடும்பங்கள் .
இந்த நிலையில் உடல் நலம் சரியில்லாமல் வாழ்வின் கடைசி நாட்களில் இருக்கும் தன் நண்பனின் ( சுப்பு பஞ்சு) கடைசி ஆசையை நிறைவேற்ற ஊட்டி வருகிறார் நடிகர் விவேக் ( நடிகர் விவேக்)
அவருக்கு கண்ணன் , சந்தியா, வருக்கி ஆகியோர் உதவுகின்றனர் . எனவே அவர்களோடு நெருங்கிப் பழகுகிறார் .
ஒரு நிலையில் சந்தியா காதலிப்பதும் அதை கண்ணன் மறுப்பதும் அவருக்கு தெரிய வருகிறது .
காதலை சேர்த்து வைக்க விவேக் முயல , காதலை மறுக்க, கண்ணன் சில காரணங்கள் சொல்கிறான் . அப்போது அவனது மாற்றுத் திறன் பற்றி ஒரு திருப்பம் நிகழ்கிறது .
கண்ணனின் காரணங்கள் என்ன ? அவை நியாயமானவையா ? சந்தியாவின் காதல் என்ன ஆனது என்பதே பிருந்தாவனம் .
மிக எளிய இயல்பான கதையை எடுத்துக் கொண்டு செண்டிமெண்ட் , நகைச்சுவை சேர்த்து தனக்கே உரிய பாணியில் படத்தைக் கொடுக்கிறார் ராதா மோகன் .
நடிகர் விவேக்கை நடிகர் விவேக்காகவே பயன்படுத்துவது நல்ல ஐடியா . வித்தியாசமான நாவலடி . அதற்கேற்ப விவேக்கின் மற்ற பட காமெடிகளை பயன்படுத்தியது புத்திசாலித்தனம் .
ராதா மோகனுக்கே உரிய சர்ச் செண்டிமெண்ட், கிம்மிக்ஸ் ஃபாண்டசி காட்சிகள் இதிலும் உண்டு.
பொன். பார்த்திபனின் வசனங்கள் நெகிழ்வு , நகைச்சுவை , கவிதை என்று எல்லா ஏரியாக்களிலும் விளையாடுகின்றன.

மொழி படத்தில் ஜோதிகா நடித்தது போன்ற கதாபாத்திரம் அருள் நிதிக்கு . சிறப்பாக நடித்துள்ளார் .
தன்யா சினிமாத்தனம் இல்லாத அழகு .
எம் எஸ் பாஸ்கர் வழக்கம் போல .
விவேக் கதாபாத்திரத்தை சுற்றி நிகழும் திரைக்கதை . அதை உணர்ந்து நடித்துள்ளார் விவேக் .
இப்படி பல நல்ல விஷயங்கள் இருந்தும் திரைக்கதையின் முக்கியமான் இடங்கள் பலவீனமாக அமைந்து விட்டது .
படத்தின் இரண்டு முக்கிய விசயங்கள் கண்ணனின் மாற்றுத் திறன் குறித்து அவன் எடுக்கும் முடிவுகளும் , காதலை மறுக்க அவன் சொல்லும் காரணங்களுமே
இரண்டும் யதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கின்றன (இதற்கு மேல் சொன்னால் சஸ்பென்ஸ் உடையும் . ஸோ…. நோ !)
மாற்றுத் திறன் குறித்து அவன் எடுத்த முடிவை வளர்ந்த பிறகும் அவன் அப்படியே வைத்து இருப்பது , அவனது நேர்மை குறித்த பிம்பத்தை நிஜமாகவே உடைக்கிறது .
தவிர, கேட்புத் திறன்., பேச்சுத் திறன் இரண்டில் ஒரு குறை இருந்தாலும் சம்மந்தப்பட்ட நபர் மாற்றுத் திறனாளிதான் .
அதுபோல நான் வசதி இல்லாதவன் என்ற விசயத்தை மட்டுமே காதலை மறுக்க கூறுவதும் போங்கு.
அதனால் அவன் மனதை மாற்ற நடக்கும் போராட்டங்கள் மனதை ஈர்க்கவில்லை
எனவே படத்தின் இரண்டாம் பகுதி அந்நியப்பட்டுப் போகிறது . அதுதான் படத்தின் பலவீனம் .
பிருந்தாவனம் .. இன்னும் குளுமையும் செழுமையும் தேவை