பிக் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கோவை ரவிச்சந்திரன் தயாரிக்க புதுமுகம் ஆதவ், மலையாளப் படங்களில் நடித்துள்ள அவந்திகா ஜோடியாக நடிக்க,
நாளைய இயக்குனர் தொடரின் இணை இயக்குனரும் பல பாரட்டுக்குரிய குறும்படங்களை இயக்கியவருமான எம்.அழகு ராஜ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் ‘
ஆதவன் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிக்கிறார் . மற்றும் கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன்,
நெல்லை சிவா, ஆக்ஷன் பிரகாஸ், நாஞ்சில் விஜயன், மதுமிதா, ரஜனி, முத்துக்காளை, வெங்கல்ராவ், வெங்கட்ராமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாடல்களை மேடையில் இசைத்துக் காட்டினார் அறிமுக இசையமைப்பாளர்
லியாண்டர் லீ மார்ட்டி. பாடல்கள் இனிமையாக தெளிவாக புரியும்படி ஈர்ப்பாக இருந்தன . சிறப்பாக படமாக்கப்பட்டும் இருந்தன .

இரு நூறு ரூபாய்ஒரு பேன்ட் இரண்டு சட்டையோடு சென்னைக்கு வந்து இயக்குனர்களை சந்தித்து வாய்ப்புத் தேடிய சம்பவங்களை பகிர்ந்து கொண்ட இசை அமைப்பாளர் மிக இயல்பாக கண்ணியமாக பேசினார் .
நிகழ்ச்சியில் பேசிய ஜாகுவார் தங்கம் , பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் படத்தின் பெயரை பாராட்டினர் .
சாந்தனு ஒரு படி மேலே போய் ” எனது சின்ன வயசில் அப்பா இயக்கிய ரத்தத்தின் ரத்தமே படத்தில் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடல் வரும் .
அப்போது எம் ஜி ஆரை அப்பாதான் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் என்று நினைப்பேன். அப்புறம்தான் எம் ஜி ஆர் எவ்வளவு பெரிய தலைவர் என்பதே புரிந்தது
படம் பற்றி கூறிய இயக்குனர் எம் . அழகுராஜ் “காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு கமர்ஷியல் படம் இது. நாயகன் ஆதவனும் நாயகி அவந்திகாவும் காதலர்கள். ஒரு சூழ்நிலையில் இருவரும் பிரிகிறார்கள்.
பிறகு நாயகி அவந்திகாவுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெறப் போகும் நேரத்தில். திருமணத்தை தடுக்க நாயகன் ஒரு கேங்க்ஸ்டர் குழுவுடன் பொள்ளாச்சி செல்கிறார்.
போகும் வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், சம்பவங்களையும் முழுக்க முழுக்க காமெடியாக சொல்கிறோம் திருமணத்தை நிறுத்தினார்களா இல்லையா என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக,
ஒரே நாளில் நடந்து முடியும் கதையாக உருவாக்கி இருக்கிறோம் என்றார் இயக்குனர். படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோயம்புத்தூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.”என்றார்






