கனடா நாட்டில் வாழ்ந்து வரும் ஒரு தமிழ்ப் பெண்ணின் போராட்டங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் “ஆக்குவாய் காப்பாய்”.
R Productions மற்றும் Lunar Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
பலமுறை மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டு பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட “அரங்காடல் ” என்கிற வெற்றிபெற்ற நாடகத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இக்கதை சகாப்தன் என்கிற நாடக ஆசிரியர் எழுதியது. இந்த மேடை நாடகத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து முழுநீள படமாக தயாரித்து உள்ளனர். சகாப்தன் எழுதிய கதையை திரைக்கதை அமைத்து, இயக்கி இருப்பவர் மதிவாசன். இவர் கனடா நாட்டில் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகர்.
கனடாவில் விபத்தில் சிக்கி கோமா நிலையில் உள்ள தனது கணவனை ஆறு வருட காலம் போற்றிப் பாதுகாத்து வருவதோடு பல வாழ்க்கை போராட்டங்கள் நடுவே ஆறு வயது பெண் குழந்தையும் வளர்ந்து படிக்க வைக்கும் ஒரு பெண். இப்படி சிரமப்படும் பெண்ணை உற்றார் உறவினர் சமுதாயம் பார்க்கும் தப்பான கண்ணோட்டம், இவற்றை எல்லாம் அவள் எப்படி கடந்து போனாள்? என்பதே கதை .
பெண் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் அவளுக்கு ஏற்படும் இன்னல்கள் தொடர்கிறது என்பதே இதன் மூலம் திரையாக்கப்பட்டுள்ளது.
முக்கிய கதாபாத்திரத்தில் கிருந்துஜா மற்றும் ஜெயாப்பிரகாஷ், டேனிஷ்ராஜ், செந்தில் மகாலிங்கம், மதிவாசன், சுரபி ஆகியோர் நடித்து உள்ளனர். முழுக்க முழுக்க கனடாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்ட இப் படத்தின் ஒளிப்பதிவை ஜீவன்ராம் ஜெயம் & தீபன் ராஜலிங்கம் ஆகியோர் கவனித்து உள்ளனர். இசை ரிஜு R.கிருஷ்ணா, எடிட்டிங் முகன் விக்கி, Technical Director P.T.சந்திரகாந்த், தயாரிப்பு நிர்வாகி S.ஆனந்த். தயாரிப்பு மேற்பார்வை R.முத்துகுமார்
Cannes Film festival
Berlin film festival
Sundance Film festival
Venice film festival
Antalya film festival
London film weel
San Sebastian international film festival
Slamdance film festival
ஆகிய உலகப் பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட இருக்கிறது படக் குழு
படம் விரைவில் வெளியாகிறது.