தரமான திரை அனுபவம் தருமா விஸ்வநாதன் அன்ட் சன்ஸ்?

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள் சூர்யதேவரா நாக வம்சி  மற்றும் சாய் சௌஜன்யா  ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் – இந்த ஆண்டின் மிகச் சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது.

நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரர் சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் – ஆகியவற்றை சூர்யா மிக சிறப்பாக கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாக கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கவனம் ஈர்க்கக்கூடிய திரை ஆளுமையும்… வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான திரைக்கதையும்… இணைந்து சமீப காலங்களில் சூர்யாவின் மிகச் சிறந்த மற்றும் மனதிற்கு நெருக்கமான நடிப்புகளில் ஒன்றாக இந்த படம் அமையும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.

திரையில் மமிதா பைஜூ தனது தனித்துவமான வசீகரத்தை வெளிப்படுத்த.. ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்வுபூர்வமான பயணத்திற்கு கூடுதலாக வலிமை சேர்த்துள்ளனர். ஜி. வி பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை… நிமிஷ் ரவியின் நேர்த்தியான ஒளிப்பதிவு… வெங்கி அட்லூரியின் தனித்துவமான கதை சொல்லும் பாணி… ஆகியவை இந்த ட்ரெய்லரை மேலும் மெருகூட்டுகிறது.

கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் படத்தின் உணர்வுபூர்வமான ஆழம் மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் திறன் குறித்தும் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையை பேச்சில் வெளிப்படுத்தினர். அந்த நம்பிக்கையை இந்த ட்ரெய்லர் முழுமையாக உறுதிப்படுத்தி இருப்பதுடன் மறக்க முடியாத திரையரங்க அனுபவத்திற்கான உத்தரவாதத்தையும் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.

 சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் – ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் வார இறுதியில் மறக்க இயலாத உணர்ச்சிகளின் உலகத்தை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *