கலைஞர் 100 இல் CD 23

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகள் ஆகிறது.
 
அதை சிறப்பிக்கும் வகையில் CD-23 என்ற பெயரில் பிரம்மாண்டமான கலை விழா  மற்றும் விருதுகள் வழங்கும் விழாவை நடத்த பல மாதங்களாகவே முயற்சி செய்து வந்தது அந்த அமைப்பு. 
 
இந்த நிலையில் தடைகள் சிக்கல்கள் நீங்கி ,  30.7.2023 அன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 4 மணி முதல் இந்த CD-23 கலை விழா  மற்றும் விருதுகள் வழங்கும் விழாநடக்க இருக்கிறது.
 
இந்த விழாவில் திரைப்படத் துறை மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பிரபல இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் இசையமைப்பாளர்கள், நடன கலைஞர்கள், சண்டை பயிற்சி கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், ஒப்பனை கலைஞர்கள், தையற் கலைஞர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும்  கலந்து கொள்ள இருக்கிறார்கள்… 
 
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்கின்றனர்..   
 
இந்த விழாவில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளை பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் நடத்துகிறார்..
 
இசை நிகழ்ச்சிகளை பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா நடத்துகிறார் ..
 
மேடையில் நடைபெறும் வீர விளையாட்டு நிகழ்ச்சிகளை பிரபல சண்டைப் பயிற்சியாளர்கள்   பாண்டியன் மாஸ்டர் மற்றும் தவசி மாஸ்டர்  நடத்துகிறார்கள்..
 
 நகைச்சுவை நிகழ்ச்சிகளை பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் நடத்துகின்றனர்…
 
தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை நட்சத்திர தம்பதிகள் பங்குபெற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்…
 
திரைப்படம் மற்றும் சின்னத்திரை பிரபல இயக்குநர்கள் உருவாக்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடம் பெறும்…
 
பிரபல கலைஞர்கள் நடத்திக் காட்டும் பல குரல் நிகழ்ச்சிகளும் விழாவில் இடம் பெறும்….
 
இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இயக்குபவர்(Show Director) திரு. S.D.சபா.
 
திரைப்படத்துறை மற்றும் சின்னத்திரையில் சாதனைகள் நிகழ்த்திய சிறந்த கலைஞர்களுக்கு இந்த விழா மேடையிலே விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்….
 
 தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர் சங்க உறுப்பினர்களான இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கும் வாய்ப்பளித்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி  நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி  நன்றி செலுத்தப்படும்..
 
 பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சியாக இது அமையும். மேலும், இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது அதை பார்க்கும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும், எல்லா நிகழ்ச்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். 
 
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் தருணத்தில்…எங்கள் சங்க “CD 23” விழாவை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம்
 
– என்கிறது சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் . 
 
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில்  டத்தோ ராதாரவி, இயக்குனர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் , குட்டி பத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர் 
 
பல்வேறு திரைப் பிரமுகர்கள்  CD 23 நிகழ்ச்சியைப் பாராட்டி வாழ்த்திய காணொளி திரையிடப்பட்டது . 
 
ராதா ரவி தைரியமாகச் செய்யுங்கள் என்றார். 
 
குட்டி பத்மினி மும்பையில் நடப்பது போல, பார்வையாளர்களுக்கு தரும் அதே முக்கியத்தை டிவி ஒளிபரப்புக்கு தரும் வகையில் நிகழ்ச்சியை வடிவமையுங்கள்.  நாலு மணிக்கு ஆரம்பித்து பத்து மணிக்கு முடிக்க எல்லாம் வேண்டாம். விடிய விடிய நடக்கட்டும்” என்றார் . 
 
“சென்னையில் மட்டுமல்ல ; மற்ற ஊர்கள் வெளிநாடுகள் என்று வருடம் ஒரு முறை இது போன்ற நிகழ்ச்சி நடக்கட்டும் ” என்றார் இயக்குனர் ஆர் வி உதயகுமார் 
 
“ஃபெஃப்ஸி அமைப்பின் முழு ஒத்துழைப்பையும் இந்த நிகழ்ச்சிக்குத் தருவோம்”என்றார் ஆ கே செல்வமணி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *