லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் ஜி கே எம் தமிழ்க்குமரன் தயாரிக்க, ராகவா லாரன்ஸ் , கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ராவ் ரமேஸ் நடிக்க பி வாசு இயக்கி இருக்கும் படம்.
பழைய சந்திரமுகி பட பாணியில் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளில் சில பல மாற்றங்களோடு வந்திருக்கும் படம்.
குடும்பப் பிரச்னைகள் தீர , குல தெய்வம் கோவிலுக்கு கிராமத்துக்கு வரும் ஒரு பணக்கார குடும்பம் ( ராதிகா, லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, சுரேஷ் மேனன், ரவி மரியா, விக்னேஷ்) சந்திரமுகி இருக்கும் பங்களாவில் தங்குகின்றனர். அதன் இன்றைய உரிமையாளர் (வடிவேலு) , ”பங்களாவின் தெற்குப் பக்கம் உள்ள பகுதிக்கு மட்டும் போக வேண்டாம்” என்கிறார் .

அதே குடும்பத்தில் இருந்து காதல் திருமணம் செய்து கொண்ட போன பெண்ணின் வாரிசான இரண்டு குழந்தைகளை , அவர்களின் கார்டியன் ( ராகவா லாரன்ஸ் ) கோவில் வழிபாட்டுக்காக அழைத்து வருகிறார் .
பணக்காரக் குடும்பப் பெண் ஒருத்தி (சிருஷ்டி டாங்கே) தெற்குப் பக்கம் போய் விட அதன் விளைவாக அந்தக் குடும்பத்துப் பெண் ஒருத்தி மீது சந்திரமுகி எழுகிறாள். கோவிலில் வழிபாடு நடந்து விட்டால் வேட்டையன் பலம் பெறுவான் என்று தடுக்கிறாள் .
மீறி வழிபாடு நடக்க, குழந்தைகளின் கார்டியன் உடலில் வேட்டையன் எழ யார் ஜெயித்தார்கள் என்பதே சந்திரமுகி 2

பிரம்மாண்டமான செட்கள் , நல்ல லொக்கேஷன் என்று பெரிய பொருட் செலவில் தயாரித்து உள்ளது லைக்கா.
பழைய சந்திரமுகி படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் சிறு சிறு மாற்றங்கள் மட்டும் கொண்ட மறு உருவக்கமாகவே இதை எடுத்து இருக்கிறார் பி வாசு .
விளைவாக ராகவா லாரன்சுக்கு வேட்டையன், செங்கோட்டையன் என்று இரண்டு கேரக்டர்கள்.
வழக்கம் போல ஆடி, ரஜினி ஸ்டைலில் நடித்தும் அடித்தும் உள்ளார் ராகவா லாரன்ஸ்.
வடிவேலு சிரிக்க வைக்கிறார்
கங்கனா ரணவத் ஆக்ரோஷம் காட்டுகிறார்
மகிமா நம்பியார் இயல்பு

லக்ஷ்மி மேனன் சில இடங்களில் கவர்கிறார் .
பின்னணி இசை பாடலிசை இரண்டும் ஒகே .
ஒலி வடிவமைப்பு நன்று .
சந்திரமுகி 2 .. சந்திரமுகி முதல் பாகத்தின் மலரும் நினைவுகள் .
குழந்தைகளோடு குடும்பங்கள் கொண்டாடி ரசிக்க இந்த வாரத்துப் படம் !