சென்னை 2 சிங்கப்பூர் @ விமர்சனம்

எ காமிக் புக் இண்டியா பிரைவேட் லிமிடெட் சார்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்து மற்றும் சிலருடன் சேர்ந்து தயாரிக்க, 

கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன் , அஞ்சு குரியன் ஆகியோர் நடிப்பில் அப்பாஸ் அக்பர் எழுதி இயக்கி இருக்கும் படம் சென்னை 2 சிங்கப்பூர்.

டிக்கெட் எடுக்கலாமா ? பேசுவோம் .
 
தான் நம்பிய  தயாரிப்பாளரே கதையைத் திருடி ஏமாற்றிய நிலையில் அவரை அடித்து உதைத்து விட்டு , நண்பனின் உதவியோடு சிங்கப்பூரில் ஒரு தயாரிப்பாளருக்கு கதை சொல்லப் போகும் ஒரு சினிமா உதவி இயக்குனர் ஹரிஷ்க்கு (கோகுல்  ஆனந்த் ), 
 
அங்கே ஒரு லோக்கல் டிவி கேமராமேன் வானம்பாடியின் (ராஜேஷ் பாலச்சந்திரன்)  நட்பு கிடைக்கிறது . 
 
அதே நேரம் தன்னைப் போலவே வாழ்வில் நொந்து அழும் ஓர் இளம்பெண் ரோஷினியின் (அஞ்சு குரியன்) அறிமுகம் நட்பாகி காதலாகிறது . 
 
வானம்பாடி உதவியுடன் கதை சொல்லப் போன தயாரிப்பாளர் ரசனை இல்லாதவராக இருக்கிறார் . ரோஷினிக்கு புற்றுநோய் இருப்பதும் அவள் சிகிச்சைக்கு நிறையப் பணம் தேவைப்படுவதும் ஹரீஷ்க்கு புரிகிறது . 
 
எனவே தயாரிப்பாளரின்  பணத்தைக் கொள்ளை அடித்து ரோஷினிக்கு உதவப் போக , தயாரிப்பாளர்  தன் அடியாட்களுடன் ரோஷினியைக் கடத்த , ஹரீஷ் பணம்  கொள்ளை அடித்தது அறிந்த ரோஷினி அவனை வெறுக்க , 
 
அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் இந்த சென்னை 2 சிங்கப்பூர். 
 
கதையை கேட்டால் கொஞ்சம் சாதரணமாகத்தான் தோணும் . ஆனால் ட்ரீட்மென்ட் மற்றும் மேக்கிங்கில் பல பலே பலே ஆச்சர்யங்களை அள்ளித் தெளிக்கும் படம் இது . 
 
சின்னச் சின்ன காட்சிகளைக் கூட அழுத்தமாகப் படமாக்கி நம்மைக் கவர்கிறார் இயக்குனர் . 
 
குறிப்பாக அவரது வசனங்கள். 
 
அண்மைக் காலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான பார்வையோடு இவ்வளவு சிறப்பான வசனங்கள் வந்தது இல்லை . 
உதாரணமாக ”நாம பொறந்ததுக்கு மொத வருஷம் நாம இல்ல . அப்போ நாம செத்துதானே இருந்தோம் . ஆக, சாவில் இருந்துதான் பிறக்கிறோம் . அப்போ சாக ஏன்  பயப்படணும்? ” என்ற வசனம், மிகப் பெரிய மன நல மருந்து.
 
  பிரம்மிப்பு . பாராட்டுகள் .
 
சிங்கப்பூரை அட்டகாசமாகக் காட்டுவதோடு ஒட்டு மொத்த ஒளிப்பதிவிலும் உள்ளம் கொள்ளை கொள்கிறார் கார்த்திக் நல்ல முத்து . 
 
டைட்டில் முதலே ஜிப்ரான் இசை உற்சாகம் .
 
சிவகார்த்திகேயனையும் அரவிந்தசாமியையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தது போல இருக்கும் கோகுல் ஆனந்த் நடிப்பிலும் கவர்கிறார் . எல்லா சோகக் காட்சிக்கும் ஒரே மாதிரி முக பாவமா ? மாத்துங்க தம்பி . 
 
ராஜேஷ் பாலச்சந்திரன் எக்சென்ட்ரிக் நடிப்பு காமெடிக்கு உதவுது . 
 
புற்று நோய் வந்த பெண்ணுக்கு ஏற்ற முகத்துக்கு பொருத்தமாக இருக்கிறார் அஞ்சு குரியன் . ஆங்காங்கே காமெடிக்கும் பஞ்சமில்லை . 
 
மலேசியத் தமிழ் நடிகர்களின் அந்த பேச்சு வழக்கும் ரசிக்க முடிகிறது . 
 
எனினும் இரண்டாம் பகுதியில் திரைக்கதை தறிகெட்டு அலைகிறது . காமெடி இருந்தாலும்  கூட ஒட்டு மொத்த படத்துக்கான ஒரு கூட்டு உணர்வு கிடைக்க மறுக்கிறது . அதுதான் படத்துக்கு பெரிய மைனஸ் . 
 
ஆங்காங்கே எல்லோரும் ஓவராக கத்துவதும் எரிச்சல் . 
 
அந்த future க்கு கொடுத்த சிம்பாலிக் உருவங்களை அப்படியே விட்டு விட்டது ஏன் இயக்குனரே ? கோர்த்து கொண்டு வந்து நிறுத்துவதுதான் படைப்பாளிக்கு உரிய கெத்து . 
 
எனினும்அ ந்த கிளைமாக்ஸ் காமெடி டுவிஸ்ட் செம அசத்தல் 
 
மொத்தத்தில் சென்னை 2 சிங்கப்பூர்.. காமெடி ட்ரிப் 
 
மகுடம் சூடும் கலைஞர் 
————————————-
‘ வசனகர்த்தா ‘ அப்பாஸ் அக்பர் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *